வெள்ளரிக்காய் முகம் பளிச்சென்று காட்சியளிக்க
வெள்ளரிக்காயை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.
பின் அதில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
இறுதியில் முகத்தை நீரால் தேய்த்துக் கழுவ வேண்டும்.
இந்த மாஸ்க்கை தினமும் ஒரு முறை பயன்படுத்த, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பளிச்சென்று அழகாக காட்சியளிக்கும்.
