வி.பி.சிந்தன்

வி.பி.சிந்தன்

bookmark

வி. பி. சிந்தன் குறிப்பு:

வி. பி. சிந்தன் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார்.

சிந்தன் வாழ்க்கை:

இவர் 1918 அக்டோபர் 10 அன்று சென்னை மாகாணம், மலபார் மாவட்டத்தின், இலையாவூர் கிராமத்தில் செரியம்மா, சாந்துநாயர் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது அக்காள் தேவகியும், அண்ணனும், அண்ணியும் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்தனும் அவர்களைப் பின்தொடர்ந்து காந்தியின் அழைப்பே ஏற்று கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனையைப் பெற்றார்.

சிந்தன் பொதுவுடமை இயக்கம்:

1934இல் காங்கிரசு சோசலிசக் கட்சி தொடங்கப்பட்டபோது இவர் அதில் இணைந்து மலபார் பகுதியில் இடதுசாரி இயக்கத்தவர்களுடன் இணைந்து பணியாற்றினார். போர் எதிர்ப்பு பரப்புரையில் ஈடுபட்டதற்காக சித்தன் 1939இல் இரண்டு ஆண்டுகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைக்குப் பிறகு 1942இல் கட்சிப் பணியாற்றுவதற்காக தமிழகம் வந்தார். இந்திய பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டதால் 1948இல் மூன்றாண்டுகள் சிறைவைக்கப்பட்டார். புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டபோது பாரதிதாசனுடன் நட்பு ஏற்பட்டது. இவரது மலையாளப் பெயரான சிண்டன் என்ற பெயரை சிந்தன் என்று பாரதிதாசன் மாற்றினார்.

1966இல் போக்குவரத்துக் தொழிலாளர் சங்கத்தை சென்னையில் தொடங்கியதில் இவரது பங்கு முதன்மையானதாகும். இவர் வில்லிவாக்கம் சட்டமன்றத்தொகுதியில் இருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக 1984 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மறைவு:

1987இல் மாசுகோவில் நடைபெற்ற மே நாள் அணிவகுப்பை பார்வையிடச் சென்றவர் 1987 மே 8 அன்று ஸ்டாலின்கிராடில் மாரடைப்பால் காலமானார்.