ரவிச்சந்திரன்
ஆரம்ப வாழ்க்கை:
ரவிச்சந்திரனின் இயற்பெயர் ராமன். இவரின் சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வாங்கல் கிராமம். இவரது இளமைக்காலம் மலேசியாவின் கோலாலம்பூரில் கழிந்தது. ரவிச்சந்திரனின் தந்தை பைரோஜி சீனிவாசன். மலேசியாவில் தமிழ் நேசன் என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். கோலாலம்பூர் தமிழ் சங்கம் நடத்திய பள்ளியில் படித்தார். மலேசிய தமிழ் மாணவர்களில் முதல் மாணவராக தேர்வு பெற்ற ரவிச்சந்திரன், மருத்துவம் படிக்க விரும்பி இந்தியா வந்தார். இந்தியா திரும்பிய பிறகு திருச்சியில் உள்ள புனித யோசப் கல்லூரியில் படித்தார்.
சென்னையில் மருத்துவ படிப்பு படிக்க வந்தபோது இயக்குனர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார். அதன் மூலம் 1964ம் ஆண்டு ‘காதலிக்க நேரமில்லை ’ படத்தின் கதாநாயகனானார்.
திரைப்படத்துறையில் அவரின் பயணம்:
ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மூலம் இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் 1964-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார்.
இதயக்கமலம், குமரிப் பெண், அதே கண்கள், கெளரி கல்யாணம், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு, இதயக்கமலம், ஊமை விழிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக நடித்த படம் ஆடுபுலி.
இறப்பு:
ரவிச்சந்திரன் அவர்கள் 25-07-2011 அன்று இரவு 8.50 மணிக்கு காலமானார்.
