மைக்கேல் ஃ பாரடே

bookmark

மைக்கேல் ஃ பாரடே காந்தத்தில் இருந்து மின்சாரம் காணும் முறையை கண்டு பிடித்தவர். மின்சார மோட்டார், மின்சார ஜெனரேட்டர் போன்ற எதிரனக்ளுக்குத் தந்தை இவர். இன்னும் இவரைப் பற்றி சொல்லப் போனால், இப்படியும் சொல்லலாம் மைக்கேல் பாரடே என்கிற ஒரு மாமனிதன் 1831-இல் மின்சாரம் என்கிற ஒன்றைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் இன்னமும் இந்த உலகம் இருட்டில்தான் இருந்திருக்கும்.

இவர் தெற்கு லண்டனிலுள்ள, இன்றைய எலிபண்ட் அண்ட் காசில் (Elephant and Castle) என்னுமிடத்துக்கு அருகாமையிலுள்ள நியுயிங்டன் பட்ஸ் (Newington Butts) என்னுமிடத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதி 1791 ஆம் வருடம் பிறந்தார். இவர் பிறந்த பொழுது ஆங்கிலேயப் பிரஞ்சுப் போர் நடந்து கொண்டு இருந்தது. இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மைப் பட்ட நிலையில் இருந்தது. இவர் தந்தையான ஜேம்ஸ் பரடே ஒரு கொல்லர். இன்பங்கள் எல்லா நபரையும் எட்டியதும் இல்லை. அதைப் போல துன்பங்கள் எல்லா நபரையும் விட்டதும் இல்லை என்ற தத்துவம் ஃ பாரடே அவர்களின் வாழ்க்கையில் அப்படியே நடந்தது. ஃ பாரடே, ஏழ்மையின் காரணமாக தனது கல்வியைத் தானே பார்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று என்றாலும் அவர் வீட்டில் உணவுப் பற்றாக்குறை காரணமாக, ஏழ்மையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்தார். அதனால் அவரது பள்ளிப் படிப்பை விடுத்தார்.

தனது 14 ஆவது வயதில் புத்தகம் கட்டுபவரும், விற்பவருமாகிய ஜோர்ஜ் ரீபோ (George Riebau) என்பவருக்குக் கீழ் தொழில் பயிலுனராகச் சேர்ந்தார். ஆனால், ஒரு படிப்பாளி எங்கிருந்தாலும் தனது அறிவை பெருக்கிக் கொள்வான் என்பதற்கு ஃ பாரடே நிச்சயம் ஒரு உதாரணம் தான். ஜோர்ஜ் ரீபோ உடன் இருந்த அந்த ஏழு வருடங்களில், பல புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு ஃ பாரடே க்கு கிடைத்தது. இதன் மூலம் அறிவியலிலும், குறிப்பாக மின்னியலிலும் அவருக்கு ஆர்வம் வளர்ந்தது.

அவர் வேலை செய்யும் கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் ஒரு வாடிக்கையாளர் ஒருவர் ஃ பாரடேயின் ஆர்வத்தைக் கண்டு மேலும் ஊக்குவிக்க எண்ணினார். ஆதலால் அறிவியல் அறிஞர் புகழ் பெற்ற வேதியியலாளரும், இயற்பியலாளருமாகிய ஹம்ப்ரி டேவி அவர்களுடைய விரிவுரைகளைக் கேட்கும் வாய்ப்பை ஃ பாரடேக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். இது ஃ பாரடே அவர்களின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருந்தது.

இருபதாவது வயதில், புகழ் பெற்ற வேதியியலாளரும், இயற்பியலாளருமாகிய ஹம்ப்ரி டேவி அவர்களுடைய விரிவுரைகளைக் கேட்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இவ்விரிவுரைகளில் தான் எழுதிய குறிப்புக்களை டேவிக்கு, பரடே அனுப்பினார். சந்தர்ப்பம் வரும்போது பரடேயைக் கவனிப்பதாகக் கூறிய டேவி, அவரைப் புத்தகம் கட்டும் தொழிலைத் தொடர்ந்தும் கைக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். சிறிது காலத்தில் ஒரு வேதியியற் சோதனை ஒன்றின்போது இடம்பெற்ற விபத்தில் கண்பார்வை இழந்த டேவி, மைக்கேல் பரடேயைத் தனது உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். பின்னர் ரோயல் சொசைட்டியில் அப்போதிருந்த சோதனைச்சாலை உதவியாளர் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டபோது, அந்த வேலையை டேவி, பரடேக்குப் பெற்றுக்கொடுத்தார்.

அக்காலத்து வகுப்பு அடிப்படையிலான சமுதாயத்தில், பரடே ஒரு கனவானாகக் கருதப்படவில்லை. 1813 தொடக்கம் 1815 வரையிலான காலப்பகுதியில் டேவி ஐரோப்பாக் கண்டத்தில் ஒரு நீண்ட பயணத்தில் ஈடுபட்டிருந்தார். பரடேயும், டேவியின் அறிவியல் உதவியாளராக அப்பயணத்தில் பங்கு கொண்டிருந்தார். அந்த சுற்றுப் பயணம் ஃ பாரடேவிற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. குறிப்பாக மின்னோட்டத்தைக் கண்டு பிடித்த பிரஞ்சு விஞ்ஞானியான ஆம்பியரைச் சந்தித்து தனது ஐயங்களைத் தீர்த்துக் கொண்டார். மேலும் டேவியுடன் கலந்துரையாடி புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொண்டார். சுற்றுப் பயணம் முடிந்து திரும்பிய ஃ பாரடே வேதியல் மாறுபாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறையை ஆராய்ந்து அதில் வெற்றியும் கண்டார்.

டேவியின் மனைவியான ஜேன் அப்ரீஸ் (Jane Apreece), ஃ பாரடே யை சமமாகக் கணிக்க மறுத்து, அவரை ஒரு வேலைக்காரருக்கு ஈடாகவே மதித்து வந்தார். இதனால் பெருந் துன்பமடைந்த ஃ பாரடே அறிவியல் துறையிலிருந்து முற்றாகவே விலகிக்கொள்ள எண்ணினார். எனினும் மிக விரைவிலேயே பரடே, டேவியைக் காட்டிலும் அவர் புகழ் பெற்றவர் ஆனார்.

மின்சார சக்தி காந்த சக்தியை உண்டாக்கக் கூடியது என பல விஞ்ஞானிகள் கூறி இருந்தார்கள். அதை வைத்து காந்த சக்தியானது மின்சார சக்தியை ஏன் உண்டாக்காது என ஏழு ஆண்டுகள் பலதரப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டார்.முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார் என்ற சொல்லுக்கு ஏற்ப ஏழாண்டுகளுக்குப் பிறகு காந்த சக்தியில் இருந்து மின்சார சக்தியை உண்டாக்க முடியும் என்பதைக் கண்டு பிடித்தார்.

1831 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி காந்தத்தில் இருந்து மின்சாரம் காணும் முறையை கால்வனா மீட்டர் பயன்படுத்திக் கண்டு பிடித்தார்.அந்த அறிய கண்டு பிடிப்பை நவம்பர் மாதத்தில் பலர் முன்னிலையில் விளக்கி அறிவியல் மேதை என தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அதன் விளைவால் டைனமோக்கள், மோட்டார்கள் ,போன்றவற்றை உருவாக்கினார்.மேலும் தங்க முலாம், வெள்ளி முலாம், பூசும் முறைகளையும் மின்சார ஜனனி போன்ற எந்திரத்தையும் கண்டு பிடித்து மின்னியல் துறையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார்.

மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த போது இவரைக் கண்டு கொள்ளாத உலகம். ஃ பாரடே தன்னை ஒரு விஞ்ஞானி என்று உலகிற்கு நிரூபித்த நாளில் இருந்து அவரைக் கண்டு கொண்டது. தந்தை உயர்ந்த நிலையில் இருந்தால் மட்டுமே தனயன் உயர முடியும் என்ற நிலைக்கு முற்றுப் புள்ளி வைத்து, எண்ணங்கள் சிறப்பாக அமைந்தாலே உலகினை எட்டிப் பிடிக்க முடியும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்த அவர் 1862 ஆம் வருடம் மக்களின் இதயம் கலங்க இயற்கை எய்தினார்.