மேரி கியூரி - 2

மேரி கியூரி - 2

bookmark

இருவருக்கும் இடையே இருந்த அறிவியல் மீதான அதீத ஆர்வம், இருவரையும் நெருக்கமாக கொண்டுவந்தது. பியரி மேரீயிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளக்கேட்டுக்கொண்டார். மேரீயோ தான் தன் தாய்நாட்டிற்கு திரும்பிவிடத் திட்டமிட்டிருப்பதாக கூறினார். பியரி தானும் அவருடன் போலாந்து வரத் தயாராக உள்ளதாக கூறினார். இச்சமயத்தில் மேரீ வார்சாவிற்கு வந்து தன் குடும்பத்தை பார்வையிட்டார். அதுவரை அவர் தனது துறையில் போலாந்தில் வேலை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். பியரியிடமிருந்து மேரீக்கு இச்சமயத்தில் ஒரு கடிதம் வந்தது. அது அவரை பாரிசிற்கு திரும்பத் தூண்டியது. மேரீயின் தூண்டுதலால் பியரி காந்தவியலில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அது அவருக்கு ஒரு முனைவர் பட்டத்தை அளித்தது. மேலும் அது அவரை தனது பள்ளியில் ஒரு பேராசிரியராக உயர்த்தியது. 26 ஜூலையில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் இரண்டு பொழுதுபோக்கு கொண்டிருந்தனர்-நெடிய மிதிவண்டி பயணங்கள், வெளிநாட்டு பயணங்கள். இவை இருவரையும் மேலும் நெருக்கமாக கொண்டு வந்தது.

1895இல் ரோஎன்ட்ஜென் எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்தார். ஆனால் அது எப்படி உருவாகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை. 1896இல் பெக்கிவிரல் யுரேனியம் உப்புகளும் எக்ஸ்-ரே கதிர்கள் போன்ற கதிர்களை வெளியிடுகின்றன என்று கண்டார். மேலும் அவர் இக்கதிர்கள் வெளியிலிருந்து வரும் ஆற்றலால் அல்லாமல் யுரேனியத்திலிருந்தே வருவதை கண்டார். மேரீ ஒரு ஆய்வுக்கட்டுரைக்காக எக்ஸ்-ரே கதிர்களை ஆராய்ந்தார். மேரீ தனது முழு திறமையையும் பயன்படுத்தி யுரேனியத்தை ஆராய்ந்தார். 15 ஆண்டுகளுக்கு முன்பு பியரியும் அவரது சகோதரரும் எலேக்ட்ரோமீட்டர் என்னும் ஒரு கருவியை மேம்படுத்தியிருந்தனர். இது மின்சாரத்தை மிக நன்றாக கண்டறியும். இதனை பயன்படுத்தி யுரேனியக்கதிர்கள் சுற்றியுள்ள காற்றில் மின்சாரத்தை உண்டாக்குகின்றன என்று மேரி கண்டார். இதை பயன்படுத்தி யுரேனியத்தின் அளவைப் பொறுத்தே அதன் கதிர் வெளிப்பாடு இருப்பதாக மேரீ கண்டறிந்தார். மேலும் அவர் இக்கதிரியக்கம் அனுக்களிலிருந்தே வரவேண்டும் என்ற தத்துவத்தின் கீழ் செயல்பட்டார்.

1897இல் மேரீக்கு ஐரீநே என்னும் மகள் பிறந்தாள். தம்பதியர் இருவரும் ஒரு நல்ல ஆய்வுக்கூடத்தை கொண்டிருக்கவில்லை. இவர்கள் தங்கள் ஆய்வுகளை பெரும்பாலும் இயற்பியல் மற்றும் வேதியியல் பள்ளிக்கு அருகில் இருந்த ஒரு கூடத்தில் நடத்தினர். அக்கூடம் நன்றாக காற்றோட்டமோ அல்லது நீர்புகா அமைப்போ கொண்டிருக்கவில்லை. அவர்கள் கதிரியக்கத்தை கையாளுவதால் வரும் ஆபத்துக்களை அறிந்திருக்கவில்லை. ஆதலால் பிற்காலத்தில் தங்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அப்பள்ளி அவர்களுக்கு எந்த நிதியும் அளிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சுரங்க நிறுவனங்கள் மற்றும் மற்ற பிற நிறுவனங்கள் சிலவும் பண உதவி அளித்தன.

மேரீயின் கதிரியக்க ஆய்வுகள் இரண்டு யுரேனிய மினெரல்களைக் கொண்டிருந்தன-பிட்ச்பிளென்ட் மற்றும் சாள்கோலைட். அவரது எலேக்ட்ரோமீட்டர் ஆய்வுகள் மூலம் பிட்ச்பிளென்ட் யுரேனியத்தைவிட நான்கு மடங்கும், சாள்கோலைட் இரண்டு மடங்கும் அதிக கதிரியக்க செயல்பாடு கொண்டிருப்பதை மேரீ கண்டார். இதன் மூலம் இவ்விரு மினரல்களிலும் யுரேனியம் அல்லாத வேறொரு தனிமத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை கண்டறிந்தார். இதனால் அவர் கதிரியக்க ஆற்றல் கொண்ட பிற தனிமங்களை கண்டுபிடிக்க முயற்சிகள் செய்தார். 1898இல் தோரியமும் கதிரியக்க ஆற்றல் கொண்டிருப்பதை கண்டார்.

மேரீக்கு அவரது கண்டுபிடிப்பை ஒரு கட்டுரையாக பதிப்பிக்க வேண்டிய தேவை தெரிந்திருந்தது. ஆதலால் அவரது கண்டுபிடிப்புகள் பற்றிய கட்டுரையை அவரது பேராசிரியர் லிப்மான் 12 ஏப்ரல் 1898இல் ‘அகாடமி’க்கு அளித்தார்.

அச்சமயத்தில் மேரீ அவரது கட்டுரையில் எவ்வளவு முக்கியமான ஒரு வாக்கியத்தை பதிவு செய்திருந்தார் என்பதை எவரும் கவனிக்கவில்லை. அது என்னவெனில் பிட்ச்பிளென்ட் மற்றும் சாள்கோலைட் ஆகியவற்றின் கதிரியக்க செயல்பாடு மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதாகும். இது அவை யுரேனியம் அல்லாத வேறொரு தனிமத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டின. ஜூலை 1898இல் மேரீயும் அவரது கணவரும் ஒரு கட்டுரை வெளியிட்டனர். அதில் அவர்கள் ஒரு புதிய தனிமத்தை கண்டுபிடித்ததை தெரிவித்தனர். அதற்கு மேரீ ‘பொலோனியம்’ என்று தன் தாய்நாட்டை பெருமைப்படுத்துவதற்காக பெயரிட்டார். 26 டிசம்பர் 1898இல் இன்னொரு தனிமத்தை கண்டுபிடித்து அதற்கு ரேடியம் என பெயரிட்டனர். மேலும் radioactivity என்ற சொல்லை கதிரியக்கத்திற்கு பெயராக இட்டனர். தங்கள் கண்டுபிடிப்பை எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிக்க பொலோனியம் மற்றும் ரேடியத்தை முழுமையாக பரிசுத்தமாக பிரித்தெடுக்க மேரீகள் களமிறங்கினர். பிட்ச்பிளென்ட் நிறைய தனிமங்களை கொண்ட ஒரு மினெரலாகும். போலோனியத்தை கண்டுபிடிப்பது சிறிது சுலபமாக இருந்தது. ஏனெனில் வேதியியல் ரீதியாக அது பிஸ்மத்தை ஒத்திருந்தது. மேலும் பிஸ்மத்தை ஒத்த தனிமமாக பிட்ச்பிளென்டில் இது மட்டுமே இருந்தது. ஆனால் ரேடியத்தை கண்டுபிடிப்பதோ கடினமாக இருந்தது. ஏனெனில் அது பேரியத்தை ஒத்திருந்தது. மேலும் பிட்ச்பிளென்டில் பேரியமே இருக்கிறது. இறுதியாக 1902இல் ஒரு டன் பிட்ச்பிளென்டில் இருந்து 0.1 கிராம் ரேடியம் குலோரைடை பிரித்தெடுத்தனர். 1900இல் மேரீ ‘‘இகோலே நார்மொலே சுபீரியூரீ’’யில் முதல் பெண் பேராசிரியரானார். ஜூன் 1903இல் மேரீ தனது முனைவர் பட்டத்தை பாரிஸ் பல்கலைகழகத்திலிருந்து பெற்றார். இதற்கிடையில் ஒரு புதிய தொழிற்சாலை ரேடியத்தை மேம்படுத்தி எடுக்க ஆரம்பித்தது. குயுரிகள் இதை பேடேன்ட் செய்யாததால் இந்த வணிகத்தில் எந்த லாபத்தையும் ஈட்டிக்கொள்ளவில்லை.