மேரி கியூரி - 3
டிசெம்பர் 1903இல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் மேரீ, பியரி மற்றும் பெக்குறேல் ஆகியோருக்கு இயற்பியல் நோபெல் பரிசை, அவர்கள் கதிரியக்கத்தின் மீது நடத்திய மிக முக்கியமான ஆராய்ச்சிகளுக்காக அளித்தது. மேரீதான் நோபெல் பரிசு பெற்ற முதல் பெண்ணாவார். குயுரிகள் ச்டாக்ஹோமிற்கு நோபெல் பரிசை பெற்றுக்கொள்ள செல்லவில்லை. ஏனெனில் அவர்களுக்கு வேலை பளு அதிகமாக இருந்தது. நோபெல் பரிசு பெறுபவர்கள் தங்கள் ஆராய்ச்சி பற்றி ஒரு வகுப்பு எடுக்க வேண்டும் என்பதால் குயுரிகள் 1905இல் ச்டோக்ஹோமிற்கு சென்றனர். நோபெல் பரிசு பணம் மூலம் தம்பதியர் இருவரும் தங்கள் ஆய்வுக்கூடத்திற்கு ஒரு வேலையாளை அமர்த்திக் கொண்டனர்
டிசெம்பர் 1904இல் மேரீ தனது இரண்டாவது மகளை பெற்றெடுத்தார். பிறகு தன் மகள்களுக்கு தாய்மொழி கற்றுத்தர போலாந்திலிருந்து ஆசிரியர்களை தன் இல்லத்திற்கு வரவழைத்தார். 19 ஏப்ரல் 1906இல் பியரி ஒரு சாலை விபத்தால் மரணமடைந்தார். இது மேரீக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. 13 மே 1906இல் சொர்போன் பல்கலைகழக இயற்பியல் கழகம் பியரி அங்கு கொண்டிருந்த பதவியை மேரீக்கு வழங்கியது. ஒரு உலகத்தரமான ஆய்வுக்கூடத்தை பியரியின் ஞாபகத்தில் உருவாக்கலாம் என்று மேரீ அப்பதவியை ஏற்றுக்கொண்டார். மேரீ சோர்போன் பல்கலைகழகத்தின் முதல் பெண் பேராசிரியரானார்.
பிற்காலத்தில் மேரீ ரேடியம் நிறுவனத்தை இயக்கினார். இது அவருக்கென பாஸ்டியர் நிருவனமும் பாரிஸ் பல்கலைகழகமும் சேர்ந்து செய்த ஒரு கதிரியக்க ஆய்வுக்கூடமாகும். 1910இல் மேரீ ரேடியத்தை பிரிப்பதில் சாதித்தார். மேலும் அவர் கதிரியக்கத்திற்கு ஒரு உலகளாவிய அளவை வைத்தார். அது அவர் மற்றும் தன் கணவர் ஞாபகமாக ‘குயிரி’ என்ற பெயரைக் கொண்டிருந்தது. பிரெஞ்சு அகாடமி ஆப் சயின்செஸ் தேர்தல்களில், ரைட் விங் பத்திரிக்கையால் மேரீ ஒரு அயல்நாட்டுக்காரர் மற்றும் நாத்திகர் என்ற வாதங்களால் புண்படுத்தப்பட்டார்
மேரீயின் மகள் பின்னாளில், பிரெஞ்சு பத்திரிகைகள் மேரீயை தேர்தல்களில் போட்டியிடும்போது அவரை ஒரு தகுதியில்லாத அயல்நாட்டுக்காரராகவும் ஆனால் அந்நிய பரிசுகள் (நோபெல் பரிசு போன்ற) பெறும்போது ஒரு பிரெஞ்சு கதாநாயகியாகவும் காட்டியதை கூறினார்.
1911இல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்சஸ் மேரீக்கு இரண்டாம் நோபெல் பரிசை, இம்முறை வேதியியலில் வழங்கியது. இப்பரிசு மேரீ ரேடியம், பொலோனியம் ஆகிய தனிமங்களை கண்டுபிடித்து, ரேடியத்தை பிரித்தெடுத்து, அதன் பண்புகளை ஆராய்ந்ததை அங்கீகரிப்பதற்காக வழங்கப்பட்டது. மேரீயின் இரண்டாம் நோபல் பரிசு அவரை பிரெஞ்சு அரசு தன் ரேடியம் நிறுவனத்தை ஆதரிக்க வைக்க நன்கு பயன்பட்டது. இந்நிறுவனத்தின் முன்னேற்றம் முதல் உலகப் போரால் சிறிது முடக்கப்பட்டது. ஏனெனில் அதிக ஆராய்ச்சியாளர்கள் போரிற்காக இழுத்துக்கொள்ளப்பட்டனர். இதன்பின் 1919இல் இந்நிறுவனம் தன் வேலைகளை திரும்பத்தொடங்கியது.
முதல் உலகப்போரின்போது மேரீ அவர்களின் பங்களிப்பு மிக அதிகமானது அவர் ரேடியாலசி மூலம் காயப்பட்ட வீரர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க மையங்கள் அமைத்தார். எக்ஸ்-ரே கருவிகள், வாகனங்கள் வாங்கி நடமாடும் ரய்டியாலசி யூனிட்களை சின்ன குயிரிகள் என்ற பெயரில் உருவாக்கினார். மேலும் பிரான்சின் முதல் இராணுவ மையத்தை 1914இல் நிறுவினார். 17 வயது மகள் இரேனேவா தனது தாய்க்கு இச்செயல்களில் துணைபுரிந்தார்.
மேரி 1934 இன் முற்பகுதியில் கடைசி முறையாக போலந்து சென்றார். ஒரு சில மாதங்கள் கழித்து, ஜூலை 4,1934இல் மேரி பச்சியில் உள்ள சன்செல்லிமொஸ் சானடோரியத்தில் ஆண்டாண்டு காலமாக கதிரியக்க வெளிப்பாடோடு பழகியதால் வந்த அப்பிலாச்டிக் இரத்த சோகையால் உயிரிழந்தார். யுத்தத்தின் போது மருத்துவமனைகளில் ஒரு கதிரியக்கராக பணியாற்றியபோது ஒழுங்கான உபகரணங்கள் அணிந்திருக்கவில்லை. அதுவும் கூட அவரது மரணத்திற்கு ஒரு வகையில் காரணம் தான். மேரீ தனது கணவர் பியரியுடன் ச்கேயுக்ஸில் புதைக்கப்பட்டார். 1890 காலத்து அவரது ஆவணங்கள் கையாள மிகவும் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன. ஏனெனில் அவைகள் கதிரியக்க வெளிப்பாடு கொண்டிருக்கின்றன. அவரது சமையல் புத்தகம்கூட அதிக கதிரியக்க வெளிப்பாடு கொண்டதாகும்.
