மிதிலைக் காட்சிப் படலம் - 602

bookmark

நின்றவர் நடத்தல்

சிந்தையைச் சீதையிடத்துவிட்டு இராமன் முனிவருடன் போதல்
 
602.

அந்தம் இல் நோக்கு இமை அணைகிலாமையால்.
பைந்தொடி. ஓவியப் பாவை போன்றனள்;
சிந்தையும். நிறையும். மெய்ந் நலனும். பின் செல.
மைந்தனும். முனியொடு மறையப் போயினான்.
 
அந்தம்     இல்- (செல்லும்  இராமனைத்  தொடர்ந்து  போன)
முடிவில்லாத; நோக்கு   இமை   -   (கண்  இமையாது  பார்த்துக்
கொண்டேயிருப்பதால்)   பார்வை   உடைய   அவளது   இமைகள்;
அணைகிலாமையால்  -  பொருந்தாதலால்;  பைந்தொடி - பொன்
தொடி  அணிந்த  சீதையானவள்;  ஓவியப்  பாவை  போன்றனள்
- சித்திரப்  பதுமை   போல  (அசைவற்று)  நின்றாள்;  சிந்தையும்
நிறையும்  -  அவளது   மனத்தின்  நினைப்பும் உறுதியும்; மெய்ந்
நலனும் - உடல் அழகும்; பின்செல் -  (தன்பின்னே) தொடரும்படி;
மைந்தனும்  -  இராமனும்;   முனியொடு   -      விசுவாமித்திர
முனிவனோடு;  மறையப் போயினான் - கண் பார்வை மறையுமாறு
சென்றான்.

இராமன்.     சீதை இராமன் முனிவர் பின்னே   செல்லும்போது
சீதையின்   பார்வை   அந்த   இராமனையே   தொடர்ந்து  செல்ல.
அச்சீதையே  கண்  இமைத்தால் அழகனைக் காண்பது நின்றுவிடுமே
எனக்  கருதிக் கண்கொட்டாது நின்றாள். அப்படி நின்றநிலை ஒவியப்
பாவை போன்றது என்றார்.

சீதையின்    மனம்   அவன்பின்னே  சென்றதால்  பெண்மைக்
குணத்தை  அவளால்  அடக்க  இயலவில்லை;ஆதலால். தன் மனக்
காதலை  வெளிப்படுத்தினாள்; இத்தகைய காம விகாரத்தால் அவளது
உடலழகும் குறைவுற்றது                                   39