போலி டாக்டர்!
1. "அளவுக்கு அதிகமா குடிச்சிருக்கிறதால உங்களை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது சார்?"
"நான் அவசரமா போகணும், சரக்கு விமானத்துலயாவது அனுப்பிடுங்க சார்!"
2. "தலைவர் ஒரு சின்ன வீடு வெச்சிருக்கிற விஷயம் அவர் மனைவிக்கு தெரிஞ்சி பிரச்சினையாயிடுச்சி...."
"என்ன பண்ணாங்க....?"
"அந்த வீட்டையும் தன் பெயருக்கு எழுதித் தரணும்னு அடம்புடிக்க ஆரம்பிச்சிட்டாங்க!"
3. "கபாலி... ஏற்கனவே ரெண்டு முறை நீ திருடின வீட்லயே ஏன் இன்னைக்கும் திருடினே....?"
"என் ராசிபலன்ல இன்னைக்கு, "புது முயற்சிகளைத் தவிர்க்கவும்"னு போட்டிருக்கு ஏட்டய்யா!"
4. "நம்ம தலைவர் பாதுகாப்பு கேட்டதுக்கு தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க..."
"ஏன்..?"
"நம்ம தலைவர் பாதுகாப்பு கேட்டது கடன்காரங்ககிட்ட இருந்தாச்சே!"
5. "அந்த அக்குபஞ்சர் டாக்டர் போலியா இருப்பார்னு எதை வச்சு சந்தேகப்படறே..?"
"பின்னே... பல சைக்கிள் கடைகளில் பணிபுரிந்த அனுபவம் உண்டு" ன்னு போர்டு வச்சிருக்கார்னா பாரேன்..!
