ஏழாவது அறிவு!

bookmark

1. "தலைவர் "ஐபிஎல்" பத்தியெல்லாம் பேசுறாரே?" 

"ஆமாம்... அதப் படிச்சுட்டா, வக்கீலாகலாமான்னு கேட்குறார்!"

2. "தலைவர் தனக்கு சொந்தமானதை எல்லாம் கட்சிக்கு உயில் எழுதி வச்சுட்டாராம்..."

"இருக்கட்டுமே... அதுக்காக அவரோட சின்ன வீட்டையும் சேர்த்தா, இப்படி உயில் எழுதி வைக்கறது?"

3. "தலைவர் மேடையில மானத்தை வாங்கிட்டாரா... என்ன செய்தார்?"

"பெரியோர்களே... தாய்மார்களே... "என்னோட சின்ன வீடுகளே"ன்னு பேசித் தொலைச்சிட்டாரு!"

4. "ஆறாவது அறிவு மட்டுமில்ல; எனக்கு ஏழாவது அறிவும் இருக்குன்னு தலைவர் அடிக்கடி சொல்றாரே... ஏன்?"

"அது ஒண்ணுமில்ல.... ஏழாங் கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்கறதைத்தான் இப்படி பீத்திக்கறாரு...!"