கட்டிப்பிடி வைத்தியம்!
1. "என்னாங்க! என் சொத்துல ஒரு காலணா சேராது" அப்படீங்கறாரு உங்கப்பா... நீங்க சும்மா இருக்கீங்களே!"
"போ! போ! பைத்தியம்... இப்போ ஏது காலணா?"
2. "உண்ணாவிரதப் போராட்டத்துல நீங்க ஏன் கலந்துக்கல?"
"என்னோட டூப்பை அனுப்பி வச்சேனே!"
3. "உங்க வீட்டுல யாருக்காவது சுகர் இருக்கா..?"
"எனக்கு ரெண்டு மூணு வீடு இருக்கு ... நீங்க எந்த வீட்டைக் கேக்கறீங்க டாக்டர்?"
4. "மன்னர் வாழ்க்கையில ரொம்ப அடிபட்டுட்டாரு..."
"ஆமா... ஆமா... மகாராணி கொஞ்சம் முரட்டுத்தனமாதான் இருக்காங்க!"
5. "என்ன இது... எதிரி மன்னரை நம் மன்னர் கட்டிப் பிடிச்சு என்னமோ பண்றாரு..?"
"கட்டிப்பிடி வைத்தியத்தால போர் வெறியைத் தணிக்க வைக்கறாராம்..!"
