புதினா முகம் பிரகாசமாக இருக்க
புதினா இலைகளை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். ஒருவேளை இக்கலவை மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து நீரால் கழுவ வேண்டும்.
இந்த மாஸ்க்கை தினமும் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதனால் முகம் பிரகாசமாக இருக்கும்.
