பால் எர்லிக்
ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் மிக முக்கியமானது என்பது எல்லோரும் தெரிந்ததே. ஆனால், ஒழுக்கம் தவறி முறையற்ற உறவுகள் வைத்துக் கொள்ளும் போது ஏற்படும் பால்வினை நோய்கள் எனப்படும் நோய்கள் பல. அப்படிப்பட்ட பால்வினை நோய்களை முதன் முதலில் கண்டறிந்தவர் கி.பி.1853 ஆம் ஆண்டுகளில் இருந்து கி.பி.1915 ஆம் ஆண்டு வரை வாழ்ந்து மருத்துவத் துறையில் டாக்டர் பட்டம் பெற்ற பால் எர்லிக் ஆவார்.
பால் எர்லிக் கி.பி.1853 ஆம் ஆண்டில் பிறந்தார்.குழந்தைப் பருவத்தில் இருந்தே கல்வியில் சிறந்து விளங்கியவர். சிறு வயதிலேயே பூச்சிகளைப் பிடித்து இனவாரியாகப் பிரித்து அவற்றை பரிசோதனை செய்வதில் ஈடுபட்டவர். அவருக்கு இல்லற வாழ்வு மட்டும் இனிதாக அமையவில்லை. எனவே தனது கவனத்தை தனது பூச்சிகள் ஆராய்ச்சியிலேயே கொண்டு சென்றார். ஆனால், அவரது வாழ்க்கை முழுக்க வறுமையே.
தனது இரவு, பகலான ஆராய்ச்சிகளை செய்ததன் விளைவாக பால்வினை நோய்களை கண்டுபிடித்து தரம் பிரித்தார் அவர். அது மட்டும் அல்லாமல், அந்த நோய்களுக்கு சில நுண் உயிர்கள் தான் காரணம் எனக் கண்டு பிடித்தார். அதற்காக பல்வேறு வகையான ஒட்டுண்ணிகள், பூச்சிகள் இவற்றைப் பிடித்து தான் கண்டுபிடித்த சில மருந்துகளை அதற்குக் கொடுத்தார். தினமும் தான் கண்டுபிடித்த மருந்துகளை அந்தப் பூச்சிகளுக்கு கொடுத்து வருவார். மருந்து கொடுத்து முடித்தவுடன், அந்தப் பூச்சிகளை ஒரு பெட்டிக்குள் பத்திரப்படுத்தி பாதுக்காப்பார். இப்படியே பல நாட்கள் நகர்ந்தது. அவர் கண்டுபிடித்த மருந்துகளால் அந்தப் பூச்சிகள் (உயிர் கொல்லிகள்) சாகாமல், இன்னும் ஆரோக்யமாக வளர்ந்தது. இதனைப் பார்த்த பால் எர்லிக் குழம்பிப் போனார். ஆனாலும், அவரது ஆராய்ச்சியில் இருந்த தவறுகளை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
அந்த ஊர் மக்கள், எர்லிக்கை கண்டு நகைத்தனர். அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதாக பரப்பினர். ஆனால் எர்லிக் இதனைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல், தனது ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்தினார். ஆனால், விதி வேறு மாதிரி அவர் வாழ்வில் விளையாடியது. ஒரு பெரு வெள்ளம், அவர் வாழ்ந்த நகரத்தை சூழ்ந்தது. அதனுடன் ஆக்ரோஷமான மழையும் சேர்ந்து கொள்ளவே, பலர் விடுகளை இழந்தனர். பலரது செல்வங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டது. அதில் எர்லிக்கின், (பூச்சிகளை பாதுக்காப்பாக வைத்து இருந்த அப்) பெட்டிகளும் அடித்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. எர்லிக் மிகுந்த மன வருத்தத்தை அடைந்தார். இன்னும் சில தினங்களில் அவர் ஆராய்ச்சியின் இறுதிக் கட்டத்தை நெருங்கும் போது இப்படி ஆகி விட்டதே என்று. அவரது அதிர்ஷ்டம் அனைத்துப் பெட்டிகளும் போகவில்லை, ஒரே ஒரு பெட்டி மட்டும் வெள்ளத்தில் மிஞ்சியது. அதைக் கொண்டு மீண்டும் தனது ஆராய்ச்சியை ஆரம்பித்தார். அவரது குறிப்புகள் கூட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. வறுமை வேறு அவரை வாட்டி எடுத்தது. மனைவியும் காலப் போக்கில் அவரை விட்டுப் பிரிந்து விட்டார்கள். எர்லிக் மனம் தளரவில்லை, இன்னும் முனைப்பாக இரவு, பகல் பாராமல் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அறநூறு முறைகளுக்கு மேல் முயற்ச்சி செய்து பார்த்தும் பயனில்லை. அறநூற்றி ஓராவது முறை, அவர் தனது பரிசோதனையில் வெற்றி பெற்றார். அக்காலத்தில், நோய் என்பதே இறைவன் கொடுத்த சாபம் என்று மக்கள் கருதிய நிலையில், தான் பால்வினை நோய்களுக்கு மருந்து கண்டு பிடித்ததை உலகிற்குப் பறை சாற்றினார். அவரது ஆராய்ச்சியின் பலனாக கி.பி.1908 ஆம் ஆண்டு, அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
