நற்செய்தி நுல்களின்படி இயேசு வழங்கிய உவமைகள்:-
இயேசு மக்களுக்குப் பெரும்பாலும் சிறு கதைகள் அல்லது உவமைகள் வழி போதித்தார். அவற்றுள் சிறப்பு வாய்ந்த ஒரு சில உவமைகள் இதோ:
ஊதாரி மைந்தன் உவமை (லூக்கா 15:11-32)
நல்ல சமாரியன் உவமை (லூக்கா 10:25-37)
பரிசேயனும் பாவியும் உவமை (லூக்கா 18:9-14)
தாலந்துகள் உவமை(மத்தேயு 25:14-30)
பத்து கன்னியர் உவமை(மத்தேயு 25:1-13)
காணாமல் போன ஆடு உவமை(லூக்கா 15:1-7)
இயேசு பல உவமைகள் வழியாக இறையாட்சி பற்றிய உண்மைகளை மக்களுக்கு அறிவித்தார்; இறையாட்சியில் பங்குபெற மக்கள் முன்வருமாறு அழைப்பு விடுத்தார்; இறையாட்சியின் பண்புகளை விளக்கினார். குறிப்பாக, எல்லா மக்களும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, கடவுளையும் மனிதரையும் அன்பு செய்து வாழ்ந்திட வேண்டும் என்று இயேசு போதித்தார். பகைவரையும் மன்னிக்க வேண்டும் என்பது அவர் வழங்கிய முக்கிய போதனைகளில் ஒன்று. தம்மைத் துன்புறுத்தி, சிலுவையில் அறைந்த பகைவரை அவரே மனதார மன்னித்தார்.
