நம்பிக்கை வரிகள்
1 அடக்கம் இன்றி நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட, ஒழுக்கமுடன் ஒருநாள் வாழ்வது சிறப்பு.
2 இந்த இரண்டு விஷயங்கள் நம் வாழ்க்கையில் உதவாது: 1. தாழ்வு மனப்பான்மை 2. தலைக்கனம். மற்றவரோடு நாம் ஒப்பிடும் போது இவை நமக்கு வாழ்வில் பின்னடைவை ஏற்படுத்தும்!
3 வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வாட்ஸ்அப் ஆக இருந்தாலும் சரி! எல்லாரும் பார்ப்பது, நம் ஸ்டேட்டஸ் தான்!
4 மனதுக்குள் என்ன நினைக்கிறோமோ அதுதான் செயலில் வெளிப்படும். நல்ல எண்ணங்கள் நிச்சயம் நம்மை நல்வழிப்படுத்தும். ஆகவே நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம்!
5 உன்னை சுற்றி உள்ளவர்களை நீ மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், முதலில் நீ மகிழ்ச்சியாக இரு! உன்னிடம் இல்லாத ஒன்றை நீ யாருக்கும் கொடுக்க முடியாது!!
