தேன் கோடையில் சருமம் கருக்காமல் இருக்க
ஒரு பௌலில் தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். வேண்டுமானால், பாலுக்கு பதிலாக பால் பவுடரை பயன்படுத்தலாம்.
பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இப்படி தினமும் செய்து வந்தால், கோடை வெயிலால் சருமம் கருமையாவதைத் தடுக்கலாம்.
