திருபாய்க்கு பின் ரிலையன்ஸ்

திருபாய்க்கு பின் ரிலையன்ஸ்

bookmark

2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், முகேஷ் அம்பானி அளித்த ஒரு நேர்காணலில், சகோதரர் அனில் அம்பானியுடன் தனக்கு "உரிமைத்துவ சிக்கல்கள்" விஷயத்தில் கருத்துவேறுபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டார். இந்த கருத்துவேறுபாடுகள் "தனிப்பட்டு மனதளவில்" மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறினார். தொழில்முறையில் சிறப்பாக நிர்வகிக்கப்படும் வலிமைமிகுந்த நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளில், இந்த கருத்துவேறுபாடு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இந்த விடயம் ஊடகங்களில் விரிவான இடத்தைப் பிடித்தது.[9]

அம்பானி குடும்பத்திற்கு நெருக்கமான நண்பராகத் திகழ்ந்த ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரான குண்டபூர் வாமன் காமத், இந்த பிரச்சினையைத் தீர்க்க உதவுபவராக ஊடகங்களால் அடையாளம் காணப்பட்டார். பிரச்சினையை தீர்ப்பதில் சகோதரர்கள் தங்கள் தாய் கோகிலாபென் அம்பானி மீது நம்பிக்கையை உறுதிப்படுத்தினர். ஜூன் 18, 2005 அன்று, சொத்துபிரிப்பை ஒரு செய்திக் குறிப்பு வழியாக கோகிலாபென் அம்பானி அறிவித்தார்.

ரிலையன்ஸ் குழுமம் அம்பானி சகோதரர்கள் இடையே பிரிக்கப்பட்டது. முகேஷ் அம்பானிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (RIL) மற்றும் இந்தியன் பெட்ரோகெமிக்கல்ஸ் கார்பரேஷன் நிறுவனம் (IPCL) கிடைத்தது. அவரது இளைய சகோதரர் அனில் அம்பானி ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ஆகிய நிறுவனங்களுக்குத் தலைவரானார். முகேஷ் அம்பானி தலைமையிலான குழுமம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட, அனிலின் குழுமம், அனில் திருபாய் அம்பானி குழுமம் (ADAG) என்று பெயரிடப்பட்டது.