கார்முகப் படலம் - 781
இராமன் வில்நோக்கி நடத்தல்
வில்லினை எடுத்து இராமன் நாண் ஏற்றலும்
வில்லொடிந்த ஓசையை அனைவரும் கேட்டலும்
781.
தோகையர் இன்னன சொல்லிட. நல்லோர்
ஓகை விளம்பிட. உம்பர் உவப்ப.
மாக மடங்கலும். மால் விடையும். பொன்
நாகமும். நாகமும். நாண நடந்தான்.
தோகையர் - மயிலைப் போன்ற மகளிர்; இன்னன சொல்லிட -
இவை போன்றவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது; நல்லோர் -
நல்லோரான முனிவர்கள்; ஓகை விளம்பிட - நல்வாழ்த்துக்கள்
கூறவும்; மாகம் அடங்கலும் - வானுலகம் முழுவதிலுமாக; உம்பர்
உவப்ப - தேவர்கள் மகிழ்ச்சியடையவும்; மால் விடையும் - (இராமன்)
பெரிய காளையும்; பொன் நாகமும் - பொன் மலையான மேருவும்;
நாகமும் நாண - யானையும் வெட்கம் அடையுமாறு; நடந்தான் - (வில்
இருக்கும் இடம்) சென்றான்.
இராமன் நடக்கும்போது அவனது பெருந்தோற்றம் கண்டு
மேருமலையும். இவனைப் போல மிடுக்கோடு நடக்க முடியாமை
பற்றிக் காளையும் யானையும் நாணின என்பது. நாகம்- மலை.
யானை. 32
