கார்முகப் படலம் - 782

bookmark

இராமன் வில்லை எடுத்தல்

782.    

ஆடக மால் வரை அன்னதுதன்னை.
‘தேட அரு மா மணி. சீதை எனும் பொன்
சூடக வால் வளை. சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது’ என்ன. எடுத்தான்.
 
மால்ஆடகம் வரை- பெரிய பொன் மலையை; அன்னது தன்னை
-  ஒத்தாகிய  அச்சிவ வில்லை; தேட அரு - தேடுதற்கரிய; மாமணி -
சிறந்த    இரத்திரனம்   போன்றவளும்;   சீதை   எனும்   -  சீதை
எனுப்படுபவளுமான;  பொன்சூடகம் - பொன்னாலாகிய  சூடகம் என்ற;
வால்வளை  சூட்டிட  - கை வளையலையணிந்த  நங்கைக்குச் சூட்டும்
பொருட்டு;  நீட்டும் - நீட்டுதற்கு உரிய; ஏடு அவிழ்மாலை - மலர்ந்த
பூமாலையே;  என்ன  -  என்று எண்ணுமாறு; எடுத்தான் - எளிதாகத்
தூக்கி எடுத்தான்.  

சிவதனுசை     இராமன்  எடுத்தது    சீதையை      மணத்தற்குக்
காரணமாவதால்  அதைச்  சீதைக்குச்  சூட்டுதற்காக   நீட்டும்   மாலை
போலும் என்றார்.                                          33