கல்வியும், பணியும்

கல்வியும், பணியும்

bookmark

1968ல் டயானா ரிட்டில்ஸ்வர்த் ஹால் பெண்கள் பள்ளியில் படித்தார். பின்னர் வெஸ்ட் ஹீத் பள்ளிக்கு மாற்றப்பட்டார், அவர் கல்வியில் பெரிதாக பிரகாசிக்க வில்லை அதிக பாடங்களில் தோல்வியுற்றிருந்தார். ஆனால் அவருக்கு இசையின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது சிறந்த பியானோ கலைஞராக ஆனார். 1977ல் ரூக்மாண்ட், ஸ்விட்சர்லாந்தில் உள்ள இன்ஸ்டிடுட் அல்பின் விடெமானட் எனும் பள்ளியில் பயின்றார் அச்சமயம் அவர் தன் வருங்கால கணவரை சந்தித்தார், டயானா நீச்சல், நீர் மூழ்குதல், பெல்லரினா எனும் கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் முக்கிய பெண்ணாகவும் பிரகாசித்தார். அவர் பாலேட் நடனத்தை சிறிது காலம் பயின்றாலும் பின்னர் தன் உய்ரம் காரணமாக வெளியேறினார். டயானா முதன் முதலாக செவிலித்தாயாக அலெக்ஸான்றா எனும் பெண்ணிற்க்கு 17 வயதிருக்கும் போது வேலை செய்து வந்தார். அதன் பின்னர் டயானா லண்டனுக்கு 1978ல் வந்து தன் தாய் அதிகமாக ஸ்காட்லாந்தில் இருந்ததால் அவரின் குடியிருப்பிலேயே வசித்து வந்தார். அதன் பின்னர் தன் 18வது பிறந்த நாளுக்கு 100,000 பவுண்டு மதிப்புள்ள குடியிருப்பு வாங்கப்பட்டது. அங்கே அவர் 1981 வரை மூன்று குடியிருப்பு வாசிகளுடன் வசித்து வந்தார். தன் தாயின் ஆலோசனையின் படி சமையல் வகுப்புகளுக்கு சென்றார், சிறந்த சமையல்க்காரர் ஆகா விடினும் நல்ல நடன பயிற்றுனராக ஆனார். அதுவும் ஒரு சறுக்கு விளையாட்டில் ஏற்பட்ட விபத்தால் நின்று போனது. அதன் பின்னர் அவர் சிறிது காலம், ஆரம்ப பள்ளியில் உத்வியாளராக இருந்தார், தன் சகோதரி சாராவுக்கு உதவி செய்து வந்தார், விருந்தினர் கூட்டம், உபசரிக்கும் பெண்ணாக இருந்தார். சிறிது காலம் லண்டனில் வசிக்கும் ஒரு குடும்பதுக்கு செவிலித்தாயாகவும் வேலை செய்து வந்தார்.