வேல்ஸ் இளவரசர் சார்லஸ் உடனான திருமணம்

வேல்ஸ் இளவரசர் சார்லஸ் உடனான திருமணம்

bookmark

வேல்ஸ் இளவரசர் சார்லஸ், டையானாவின் மூத்த சகோதரி சாராவுடன் முன்னரே தொடர்பு வைத்திருந்தார், அதன் பின்னர் பல்வேறு நிகழ்வுகளுக்கு பின், பிப்ரவரி ஆறாம் தேதி 1981ல் இளவரசர் சார்லஸ் தம் காதலை கூற டயானாவும் ஏற்றுக்கொண்டார். பிப்ரவரி இருபத்தி நான்காம் தேதி, இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது, டயானா 30,000 பவுண்டு மதிப்புள்ள மோதிரத்தை தேர்வு செய்தார். அதே மோதிரம் பின்னர் கேத் மிடில்டன்னுக்கு 2010ல் நிச்சயதார்த்த மோதிரம் ஆனது. தன் நிச்சயதார்த்தை தொடர்ந்து டயானா தன் வேலைகளை விடுத்து, க்லேரன்ஸ் இல்லத்தில் சிறிது காலம் வசித்து வந்தார். அதன் பின்னர் தன் திருமணம் வரை பக்கிங்க்ஹாம் இல்லத்தில் வசித்து வந்தார். 1981, ஜூலை, இருபத்தி ஒன்பதாம் தேதி டயானாவுக்கும், வேல்ஸ் இளவரசர் சார்லஸ்க்கும் புனித பால் தேவலயத்தில் திருமணம் நடந்தது. இதன் மூலம் இருபது வயது டயானா வேல்ஸ் இளவரசி ஆனார். இத்திருமணத்தை 750 மில்லியன் மக்கள் தொலைக்காட்சியின் ஊடாகவும், அறுபது லட்சம் மக்கள் நேரடியாகவும் கண்டனர். டயானா இருபத்தி ஐந்து அடி நீளமுள்ள ஒன்பதாயிரம் பவுண்டு மதிப்புள்ள உடையை அணிந்து வந்தார்.