கடிமணப் படலம் - 1263

bookmark

மணமுரசு அறைதல்

மண முரசறையச் சனகன் ஆணை
 
(வேறு) கலிவிருத்தம்
 
1263.    

மானவர் பெருமானும்.
   மண நினைவினன் ஆக.
“தேன் அமர் குழலாள்தன்
   திருமணவினை. நாளை;
பூ. நகு மணி வாசம்.
   புனை நகர் அணிவீர்!” என்று
ஆனையின்மிசை. யாணர்.
   அணி. முரசு அறைக!’ என்றான்.
 
மானவர்   பெருமானும்  -  மனிதகுலத்  திலகனாகிய   சனகனும்;
மணநினைவினனாக   -   (இராமன்  சீதை  இருவரின்)   திருமணமே
நினைவாக   இருந்தான்  ஆதலின்;   ‘தேன்   அமர்  குழலாள்தன்
திருமணவினை  நாளை  -  வண்டுகள்  விரும்பும்   கூந்தலையுடைய
சனகியின்   திருமண  நிகழ்வு.  நாளை  யாகும்;  பூநகு   மணிவாசம்
புனைநகர் அணிவீர் என்று - மலர்களாலும் ஒளிர்கின்ற  மணிகளாலும்
நறுமணப்   பொருள்களாலும்.   இயல்பாகவே  அழகுடைய    மிதிலை
மாநகரை  மேலும்  புதிதாக  அலங்கரிப்பீர்களாக என்று;  ஆனையின்
மிசை யாணர் அணிமுரசு அறைக  என்றான் - யானையின்  மேலே
அழகிய   அணிகள்    அணியப்பெற்ற   முரசினை   ஏற்றி   அதனை
அடிப்பித்து (மக்கட்குத்) தெரிவியுங்கள் என ஆணையிட்டான்.

மணமுரசு.  கொடை முரசு. விழாமுரசு. என மூவகை முரசுகளில் இது
மணமுரசு    என்பதனை.   “மணம்   நாளை   அணிமுரசு   அறைக”
என்பதனால்  தெரிவித்தார்.  ஆனாலும் இம்  மணவிழாவில்  பிறர்க்குக்
கொடையளித்தலால் கொடைமுரசுமாய். மிதிலை நகரமே  விழாக்கோலங்
கொள்ளுதலால்.     விழாமுரசுமாய்     மும்முரசுமாகி    முழங்குவது
இனிவரும்பாடல்களில்    உணர்த்தப்படும்.  திருமண  வினை   நாளை
என்பதனால்.   முரசறைந்தது  முந்தைய  நாள்   இரவு   எனக்கொள்க.
இதுமுதல் இருபது கவிகளில் உள்ள சந்த இன்பம்.  கற்பார்  உளத்தைக்
களிகூர வைக்கும்.                                          19