எழுச்சிப் படலம் - 866

bookmark

மகளிரும் ஆடவரும் ஆரவாரத்தோடு வழிச்சேறல்

866.    

சித்திரத் தடந் தேர் மைந்தர் மங்கையர்.
உய்த்து உரைப்ப. நினைப்ப. உலப்பிலர்.
இத் திறத்தினர் எத்தனையோ பலர்.
மொய்த்து இரைத்து வழிக்கொண்டு முன்னினார்.
 
உய்த்து    உரைப்ப- (இவ்வளவு  என்று)  ஊகித்து  உரைக்கவும்;
நினைப்ப   -   நினைக்கவும்   முடியாதபடி;   உலப்பு   இலர்   -
எண்ணற்றவர்களாகிய; சித்திரத்  தடந்தேர்  -  ஓவிய  வேலைப்பாடு
அமைந்த  பெரிய  தேரில்  சென்ற; மைந்தர் மங்கையர் - ஆடவரும்
மங்கையருமாகிய;   இத்   திறத்தினர்   -   இப்படிப்  பட்டவர்கள்;
எத்தனையோ பலர் - மிகப் பலர்; மொய்த்து - நெருங்கி; இரைத்து-
ஆரவாரித்து; வழிக்கொண்டு - செல்லும் வழியைக் குறியாகக் கொண்டு;
முன்னினார் - முற்பட்டுச் சென்றார்கள்.

ஆடவரும்  மகளிரும்  பலவாறு  ஆரவாரம்  செய்துகொண்டு வழி
நடந்தனர் என்பது.                                         50