ஊர்வலம்

bookmark

1. "தலைவர் எதுக்கு ரோடு ரோலர் வாங்கியிருக்கார்..?" 

"ஊர்வலத்துல மெதுவா போறதுக்கு வேணும்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டார்!"

2. "கத்தி முனைங்கிற இடம் எங்க இருக்கு?"

"ஏன் கேக்குற?"

"அங்கதாண்ணே தினமும் ஆட்களை மிரட்டி, நகைகளை கொள்ளையடிக்கிறதா பேப்பர்ல நியூஸ் வருது..."

3. "ஒர்க் ஷாப் வைக்க பேங்க்ல லோன் கேக்கறீங்களே... முன் அனுபவம் இருக்கா?"

"இருக்கு சார்.... இதுவரை பல பேங்க்ல லோன் கேட்டிருக்கேன்!"

4. "அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே...?"

"ஆஸ்பத்திரி வாசல்ல, "கிட்னியில் அதிர்ஷ்டக்கல் பதித்துத் தரப்படும்"னு போர்டு வச்சிருக்காரே!"

5. "நான் உங்ககிட்டே கொடுத்த கடிதங்களை நீங்க ஏன் தபாலிலே போடலே?"

"போட்டுட்டேனே!"

"பொய் சொல்றீங்களே... நீங்க போட்டீங்களான்னு கண்டுபிடிக்கத்தானே எப்பவும் நம்ப அட்ரசுக்கே ஒரு கார்டு எழுதி மற்ற கடிதங்களோடு கொடுத்தனுப்பறேன் நான்!"