உண்டாட்டுப் படலம் - 1075
கணவன் இளையாள் பெயரைச் சொல்லி மூத்தாளை
அழைக்க அவள் வருந்துதல்
1075.
வளை பயில் முன்கை ஓர் மயில் அனாள்தன்கு
இளையவள் பெயரினைக் கொழுநன் ஈதலும்.
முளை எயிறு இலங்கிட முறுவல் வந்தது;
களகள உதிர்ந்தது கயற்கண் ஆலியே.
கொழுநன் இளையவள் பெயரினைத் தனக்கு ஈதலும் - (தன்)
கணவன். (தனக்கு) இளையாளாய் வந்தாள் பெயரை (மது மயக்கால்)
தனக்கு இட்டு அழைத்தலும்; வளை பயில் முன்கை மயில் அனாள் -
வளைகள் நெருங்கிய கைகளையுடைய மயில்போன்ற ஒருத்திக்கு;
முளை எயிறு இலங்கிட முறுவல் வந்தது - (தன் கணவனின் சொற்
சோர்வுகண்டு) முல்லை மொக்குகளைப் போன்ற பற்கள் ஒளிருமாறு
(முதலில் அவளுக்குப்) புன்னகை வந்தது; கயற்கண் ஆலி களகள
வென உதிர்ந்தது - பின்பு. தன் கணவன் (இளையாள்மாட்டு தன்
மாட்டுக் கொண் டிருப்பதைவிடப் பேரன்பு கொண்டு அவள் பேர்
மொழிகிறான் என்னும் நினைவு வந்தவுடன்) அவள் கயல்போன்ற
கண்களிலிருந்து களகளவென்று கண்ணீர்த் துளிகள் சிந்தின.
கணவன் அன்பு பங்கிடப் பெறுதலைப் பொறாத காரிகையர் மன
இயல்பு விளக்கியவாறு. களகள விரைவும் மிகுதியும் குறித்த இரட்டைக்
கிளவி. மது மயக்கால் விளைந்த சொற்சோர்?வு என்ற நினைப்பில
முதலில் நகையும். இளையாள் மாட்டு அன்புடையான் என அறிந்த
நினைப்பில் அழுகையும் சேர விளைந்தன. 29
