இராம்சே - 1
இராம்சே தலை சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவர்.தனது அனுபவத்தைக் கொண்டு வேதியியல், இயற்பியல் போன்றவற்றிற்கு இடையே உண்டாகும் ஒற்றுமை, வேற்றுமைகளை ஆய்வுகளின் மூலம் அறிவித்தவர்.வாயு நிலையில் இருந்த காற்றை திரவ நிலைக்கு கொண்டு வந்து ஹீலியம், ஆர்கான், கிரிப்டான், நியான்,செனான் போன்ற வாயுக்களைக் கண்டறிந்தவர்.அறிவியல் ஆய்வுக் கழகம் இந்தியாவில் உள்ள பெங்களூருவில் உருவாவதற்கு இடத்தை அறிவித்து ஆலோசனையும் வழங்கியவர்.வருங்கால மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் முறைகள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டியவர்.அப்பேற்பட்ட தலை சிறந்த விஞ்ஞானி தான் இராம்சே.
அறிஞர் இராம்சே இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் வில்லியம், மேரி இராபர்ட்சன் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். காலம் கடந்து பிறந்ததால் அவரைப் பெற்றோர்கள் பாசத்துடன் தான் வளர்த்து வந்தனர். பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே தனி ஆசிரியர் ஒருவரை நியமித்து இராம்சே அவர்களுக்கு கல்வி கற்பித்தனர் . வசதி மிக்க குடும்பத்தில் பிறந்ததாலும், அதிக செல்லத்தை கொடுத்ததாலும் இராம்சே அதிக குறும்புத் தனத்துடன் காணப்பட்டார்.
இளைஞனான இராம்சே கல்லூரியில் சேர்ந்து 1870 ஆம் ஆண்டு தனது கல்லூரிப் படிப்பை முடித்தார்.அவருக்கு அயல் நாடு சென்று கல்வி கற்க வேண்டும் என்ற ஆசை வந்தது. பெற்றோரும் அதற்கு சம்மதித்தனர். ஜெர்மனியில் இராம்சே மேல் படிப்பை முடித்தார். டியூபின் ஜென் என்ற இடத்தில் உள்ள விஞ்ஞான ஆராய்சிக் கழகத்தில் சேர்ந்தார்.அதீத செல்வ செழிப்பை கொண்டு இருந்தாலும் வளர வளர அனுபவங்கள் நிறைய கிடைக்க இராம்சே தனது குறும்புத் தனத்தை முழுவதும் விட்டு இருந்தார். பெரியோர்களிடம் மரியாதையுடன் நடந்து கொண்டார்.
சுயநலம் இல்லாத இராம்சே ஜெர்மனியில் டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.பிறகு நாடு திரும்பிய அவர் கிளாஸ்கோ நகரில் உள்ள ஆண்டர்சன் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார்.அப்படியே தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளையும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் செய்யத் தொடங்கினார்.தனது திறமையால் 29 வயதிலேயே பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் முதல்வரானார்.பிறகு, அவருக்கு திருமணமும் நல்ல படியாக நடந்தது.என்றாலும் இரசாயனத்திர்க்கும், பௌதீகத்திற்க்கும் இடையே உண்டாகும் ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் ஆய்வு செய்தார். அவ்வப் பொழுது ஆய்வின் முடிவுகளையும் வெளியிட்டுக் கொண்டும் இருந்தார்.அக்காலத்திலேயே அதுவும் பிரிட்டனிலேயே கல்வி வியாபாரமான நிலையில் தான் இருந்தது.பண முதலைகள் மாணவர்களிடம் அதிக பணத்தை வாங்கிக் கொண்டு குறைவான சம்பளத்தில் ஆசிரியர்களை நியமித்தனர். பல கல்லூரிகள் இதே நிலையில் இயங்கியதால் படித்துப் பட்டம் பெற்ற ஆசிரியர்களும் வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக தங்களுக்குக் கிடைத்த சம்பளத்தில் வேலை பார்த்தனர்.அதனால், மாணவர்களுக்கு தங்களது முழு ஈடுபாட்டுடன் சொல்லித் தர அவர்கள் தயாராக இல்லை என்கிற நிலை. இதனை இராம்சே கண்டித்துக் குரல் எழுப்பினார்.அது மட்டும் இல்லை, இந்த நிலையை அவர் உலகிற்கு எடுத்து சொல்ல முற்பட்டார்.
அவர் அவ்வாறு போராடுவதற்கும், குரல் எழுப்புவதற்கும் இன்னொரு காரணமும் இருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் லஞ்சம் வாங்குவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தது. அவர்கள் காலனி ஆதிகத்தில் இருந்த நாட்டு மக்களுக்கும், லஞ்சத்தை கற்றுக் கொடுத்து இருந்தனர்.லஞ்சம் வாங்குவதில் பிரிட்டிஷ் அதிகாரிகள் உலகத்தின் பிதா மகர்களாக இருந்தனர். இதனால் தகுதியே இல்லாத கல்லூரிகளுக்கு எல்லாம் இங்கிலாந்து அரசு பணத்தை வாங்கிக் கொண்டு அனுமதி அளித்தது.இதுவும் கூட இராம்சே போராட ஒரு காரணமாக அமைந்தது. அவரது போராட்டம் சுருட்டல்களுக்கு எதிரான போராட்டமாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால் கல்வி வளர்ச்சிக்காக போராடினார், குரல் கொடுத்தார். அவரது போராட்டத்தில் இருந்த நியாயத்தை பிரிட்டன் புரிந்து கொண்டது. மேலும், அடிப்படை வளர்ச்சி இல்லாத கல்லூரிகளை மேம்படுத்த ஒப்புக் கொண்டது. இந்தப் போராட்டத்தால் செல்வாக்குப் பெற்ற இராம்சேவுக்கு, லண்டன் பல்கலைக் கழக பேராசிரியர் பதவி தேடி வந்தது.
