இந்திரா காந்தி - 3

இந்திரா காந்தி - 3

bookmark

ஒரு பிரதம மந்திரியாக அவருக்கு கிடைத்த அனைத்து வளங்களையும் அவதானமாக பயன்படுத்தி தனது பலத்தையும் அதிகாரத்தையும் பலப்படுத்திக் கொண்டார். மேலும் அவருக்கு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி வலு குறைந்த அமைச்சரவைகளை அமைத்து;க்கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. மேலும் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பலம்மிக்க மூத்த தலைவர்களை புறந்தள்ளியதன் காரணமாக இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக பிளவுப்பட்டது. அதன்காரணமாக பிளவுபட்ட கட்சியின் ஒரு பகுதி இந்திரா காங்கிரஸ் எனவும் அழைக்கப்பட்டது.

இதனிடையே கடந்த 1971 ஆம் ஆண்டு மேற்கு கிழக்கு பாகிஸ்தான்களுக்கிடையில் ஏற்ப்பட்ட மோதல்களை கவனத்திற்கொண்டு கிழக்கு பாகிஸ்தானின் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானுடன் போரை நடாத்தி மேற்கு பாகிஸ்தானை தோற்கடித்து பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்படும் பங்களாதேசைப் பிரித்து தனிநாடாக அமைக்க உதவிபுரிந்தார்.

மேலும் கடந்த 1975 ஆம் ஆண்டு அவசரகால சட்டத்தை அறிவித்த இந்திரா காந்தி அரசியல் சட்டத்தில் தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக்கொண்டார். மேலும் குறித்த விடயமானது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையென அவர் மீது வழக்கு தொடரப்பட்டு சுமார் 19 மாதங்கள் அவர் வழக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் குறித்த விடயமானது அவரது செல்வாக்கை பாதித்த நிலையில் கடந்த 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தில் படுதோல்வியடைந்தமைக்கு அதுவும் காரணமாக அமைந்தது.

இதனிடையே இவரின் பல்வேறு அரசியல் நகர்வுகள் பல மூத்த அரசியல்வாதிகளை மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு மெய்சிலிர்க்க வைத்தது. இதேவேளை இவரின் ஆட்சிக்காலத்திலேயே இந்தியா முதலாவது அணுவாயு சோதனையை நடத்தியது. கடந்த 1967 ஆம் ஆண்டு ஒரு தேசி அணுசக்தி திட்டம் தொடங்கப்பட்டது. அது கடந்த 1974 ஆம் ஆண்டு சிரிக்கும் புத்தர் எனும் இரகசிய பெயருடன் இராஜஸ்தானில் நிலத்திற்கடியில் குறித்த அணு சோதனை நடாத்தப்பட்டது. குறித்த அணு சோதனை இந்தியாவை உலகில் இளம் அணுசக்தி அதிகாரமுள்ள நாடாக பிரதிபலித்தது.