இந்திரா காந்தி - 4

இந்திரா காந்தி - 4

bookmark

மேலும் 1960 ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் இந்திரா காந்தியினால் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சி திட்டம் நிலவி வந்த உணவுப் பற்றாக்குறை நீக்க உதவியது. மேலும் இந்தியாவின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க செய்வதற்கும் அவரின் பசுமைப் புரட்சி; உதவியது. இன்றைய தினமும் குறித்த பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றமை அவரின் சிறந்த அரசியல் முன்னெடுப்புகளுக்கு சான்றாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாதம் வளர்ந்து வந்த காலப்பகுதியில் தீவிரவாதிகளை இல்லாதொழிக்கும் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பொற்கோயிலுக்குள் முகாமிட்டிருந்த தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு இந்திய இராணுவத்திற்கு பொற்கோயிலுக்குள் சென்று தாக்குதல் நடந்த இந்திரா காந்தி அனுமதி வழங்கினார். இந்த செயல் இந்திரா காந்தி மீது சீக்கியர்கள் சினம்கொள்வதற்கு பிரதான காரணமாக அமைந்தது.

மேலும் சீக்கிய தீவிரவாதிகள் மீது இந்திரா காந்தி தொடர்ச்சியாக மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக அவர் மீதான வெறுப்பு சீக்கியர்களுக்கு மேலும் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி புது டில்லியில் தனது தலைமை அமைச்சர் இல்லத்தில் வைத்து தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்திய வரலாற்றில் முதல் பெண் பிரதமர் என்ற அந்தஸ்தை பெற்று, இந்தியாவை சர்வதேச ரீதியில் வல்லமைமிக்க ஒரு நாடாக மாற்றிய பெருமைக்குரியவர் இந்திரா காந்தி. மேலும் இந்திய நாட்டில் பல தலைவர்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் இந்திரா காந்தி இந்திய நாட்டின் இரும்புப் பெண்மணி என்று சொல்லும் அளவிற்கு தனது சீரான ஆட்சியை மேற்கொண்டு உலகளாவிய ரீதியில் அனைவரது மனதிலும் இடம்பிடித்த தலைவர்களில் ஒருவராவார்.