இசுலாமியப் பார்வை :-

இசுலாமியப் பார்வை :-

bookmark

இசுலாமில், இஞ்சில் வேதத்தின் படி இசுரேலிய மக்களை வழி நடத்த அனுப்பப்பட்ட கடவுளின் தூதராக, மீட்பராக ஈசா (இயேசு) கருதப்படுகிறார். முசுலிம்கள் புதிய ஏற்பாடு உண்மையல்ல எனவும், இயேசுவின் உண்மையான செய்தி தொலைந்துவிட்டது அல்லது மாற்றப்பட்டுவிட்டது எனவும் அதனை முகம்மது பின்னர் மீள்வித்தார் எனவும் நம்புகின்றனர். இயேசுவில் நம்பிக்கை வைப்பது (மற்றும் கடவுள் அனுப்பிய ஏனைய இறைதூதர்களிடமும் நம்பிக்கை வைப்பது) ஒரு முசுலிமாக இருக்கத் தேவையானது. குரான் முகம்மதுவை விட அதிகமாக இயேசுவை 25 தடவைகள் குறிப்பிடுகிறது. மேலும் இயேசு ஏனைய இறை தூதர்களைப் போல மனிதன் எனவும், கடவுளின் செய்தியை பரப்ப தெரிவு செய்யப்பட்டார் எனவும் வலியுறுத்துகிறது. இசுலாம் இயேசு கடவுளின் அவதாரமோ, கடவுளின் மகனோ இல்லை எனக் கருதுகிறது. இசுலாமிய நூல்கள் ஒரே கடவுட் கொள்கையை வலியுறுத்தி, கடவுளுக்கு இணையாக இருப்பதையும் உருவ வழிபாடாகக் கருதுகின்றது. குரான் இயேசு தன்னை திரித்துவத்தின் ஒருவராக அறிவிக்கவில்லை எனவும் இறுதி தீர்வின் போது இயேசு அவ்வாறான ஒன்றை மறுதலிப்பார் எனவும் எதிர்வு கூறுகின்றது (குரான் 5:116). ஏனைய இறை தூதர்கள் போல் இயேசுவும் ஓர் முசுலிமாக குரானில் கருதப்படுகிறார்.