அனகோண்டா
அனகோண்டாக்கும், அலுமினிய குண்டாக்கும் என்ன வித்தியாசம்?
தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா... தண்ணி உள்ள இருந்தால் அது அலுமினிய குண்டா."
"டாக்டர்! எனக்கு பல் ஆடுது!"
"எந்த பாட்டுக்கு?"
"குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?"
"தெரியல!'
"குளிக்கும் போதே துவட்ட முடியாதே!"
"எங்க தாத்தா கடி ஜோக்கே சொல்ல மாட்டார்..."
"ஏன்?"
"அவருக்குத்தான் பல் இல்லையே."
"இங்க கணபதி ஸ்ரீனிவாச கோபால சுப்ரமணியன் வீடு எது?"
"பேரை இப்படி மொட்டையா சொன்னா..எப்படி..அவர் இனிஷியல் என்ன?"
