வேறுபாடுகள்
தாழ்த்தப்பட்டவர்களும் கோயிலுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என போராட்டங்கள் எழுந்த பொழுது, அனைவரும் இந்து மதத்தின் அறத்தைப் பேண வேண்டும் என காந்தி சொன்னார் என அம்பேத்கர் எழுதி உள்ளார்.[5]
திருநெல்வேலி சைவ சித்தாந்த குருகுலப் பள்ளியில், சமூகத்தில் உயர்ந்த வகுப்பினர்க்கு தனி விடுதி, மற்றவர்க்கு தனி விடுதி என கடைபிடிக்கப்பட்டதை, இந்து மத அறத்தின்படி சரி என காந்தி வாதிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே, ஈ. வெ. இராமசாமி நாயக்கரை பேராய கட்சியிலிருந்து (congress party) வெளியேற முடிவெடுக்க தள்ளியது. இதனை ஒட்டி, பெங்களூரில் ஈ. வெ. இராமசாமி நாயக்கருக்கும், காந்திக்கும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இக் கலந்தாய்விலும், காந்தி இந்து மத அறத்தின் தேவையை வலியுறுத்தியதால் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் பேராய கட்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்தார்.
