சுயசரிதை
1. "எதுக்கு, உங்க பையனோட பிராக்ரஸ் ரிப்போர்ட்டோட வந்திருக்கீங்க?"
"நீங்க தானே டாக்டர் எல்லா ரிப்போர்ட்சும் எடுத்துக்கிட்டு ட்ரீட்மென்டுக்கு வரச் சொன்னீங்க!
பா.ஜெயக்குமார்
2. "நம்ம மாமூல் பணத்தை திருடினது கபாலி தான்னு எப்படி சார் கண்டுபிடிச்சீங்க..?"
"பழக்க தோஷத்துல அதுக்கும் மாமூல் தர வந்தானே..!"
வீ.விஷ்ணுகுமார்
3. "எங்க ஊர்ல தண்ணிக் கஷ்டம்னு டாக்டர்கிட்ட சொன்னது தப்பாப் போச்சு..."
"ஏன்?"
"மாத்திரையை முழுங்கறதுக்கு ஒரு டானிக்கும் எழுதிக் குடுத்துட்டாரு!"
கே.சேகர்
4. "தலைவர் எழுதின சுய சரிதை அமோக விற்பனையாமே..?"
"அதுக்காக அவரு இன்னொரு சுய சரிதை எழுதறது கொஞ்சம் கூட நல்லா இல்லை..!"
