வரைக்காட்சிப் படலம் - 959

bookmark

959.

கோள் இபம் கயம் மூழ்க. குளிர் கயக்
கோளி. பங்கயம். ஊழ்கக் குலைந்தவால்;
ஆளி பொங்கும் மரம் பையர் ஓதி. ஏய்.
ஆளி பொங்கும். அரம்பையர் ஓதியே.
 
கோள்  இபம் - வலிமையுள்ள  யானைகள்;  கயம்  மூழ்க - அம்
மலையிலுள்ள நீர்நிலைகளில் மூழ்கி விளையாட; குளிர் கயக் கோளி -
(அக்   குளத்தின்   கரையிலுள்ள)   குளிர்ச்சி   தரும்   பெரிய  ஆல
மரங்களும்;  பங்கயம்  ஊழ்க  -  தாமரை  மலர்களும் நலம் கெட்டு;
குலைந்த  -  குலைந்தன;  ஆளி பொங்கும் - சிங்கங்கள் சீறியெழும்;
மரம் பையர் ஓதி - மரங்களைப் பக்கத்தேயுடைய மலையில்;ஏய் அரம்
பையர்  -  தங்கிய  தேவமாதரின்; ஓதி ஆளி பொங்கும் - கூந்தலில்
வண்டுகள் மகிழ்ச்சியுடன் தங்குவன. 

யானைகள்     அம்   மலையின்   கயத்திலே  மூழ்குவதால் அந்த
நீர்நிலையிலுள்ள  தாமரையும்.   அக் குளக்  கரையிலுள்ள ஆலமரமும்
அழிந்தன.   ஒரு   பக்கம்   தேவமாதர்   தங்குவதனால்  அவர்களின்
கூந்தலில் தேனைப்  பருகி  வண்டுகள் களித்து நிற்கும் என்றார். ஆளி
-அளி என்பதன் நீட்டல் விகாரம். ஓதி: பெண் மயிர். மலை.        32