ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ்

ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ்

bookmark

துணி வியாபாரத்தில் நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்ந்த திருபாய் தனது முதல் நூற்பாலையை அகமதாபாத்தில் உள்ள நரோதாவில் 1977-ஆம் ஆண்டில் துவங்கினார். துணிகள் பாலியஸ்டர் இழை நூல் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டன.[3] திருபாய் "விமல்" என்னும் வியாபாரப் பெயரை தொடக்கி வைத்தார். இது அவரது மூத்த சகோதரரான ரமனிக்லால் அம்பானியின் மகனான விமல் அம்பானியின் பெயரால் தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்நாட்டில் செய்த மிகப் பரந்த சந்தைப்படுத்தலின் காரணமாக "விமல்" வீட்டுக்கு வீடு அறிந்த பெயரானது. சில்லறை விற்பனை உரிமையகங்கள் துவங்கப்பட்டன. அவை "ஒன்லி விமல்" என விமல் டெக்ஸ்டைல் வியாபாரப் பெயரை மட்டும் விற்கப் பயன்படுத்தப்பட்டன. 1975 ஆம் ஆண்டில், உலக வங்கியில் இருந்தான ஒரு தொழில்நுட்ப குழு ரிலையன்ஸ் துணியாலையின் உற்பத்திப் பிரிவை பார்வையிட்டது."வளர்ச்சியுற்ற நாடுகளின் தர அடிப்படையிலும் கூட மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது" என்கிற சான்றிதழை அந்த காலகட்டத்தில் பெற்ற அபூர்வ சிறப்பு அந்த பிரிவுக்கு கிட்டியது.