முகமூடி

bookmark

1. "விளம்பரம் படம் எடுக்கிற டைரக்டரை சினிமா எடுக்கச் சொன்னது தப்பாப் போச்சா... ஏன்?" 

"ரெண்டு நிமிஷம் ஓடற மாதிரி சினிமா எடுத்திருக்காரு...!"

2. "இது நமிதா புடவை, இதை எடுத்துக்கோங்கம்மா...!"

"இன்னொருத்தவங்களோடது வேணாங்க... புதுப் புடவையா காட்டுங்க!"

3. "டாக்டர் எதுக்கு பேய் மாதிரி முகமூடி போட்டுக்கிட்டு, பேஷன்ட் ரூமுக்குள்ளே திடீர்னு நுழைஞ்சு பயமுறுத்தறாரு.?"

"அதிர்ச்சி வைத்தியம் பண்றாராம்..!"

4. "நிலாவுல தண்ணி இருக்கோ, இல்லையோ... எண்ணெய் இருக்கும்னு சொல்றியே... எப்படி?"

"அங்க பாட்டி உக்காந்து வடை சுடுறாங்க இல்ல.... அதை வச்சுத் தான் சொன்னேன்!"

5. "ஏட்டய்யாவை ஏன் அரெஸ்ட் பண்றாங்க....?"

"ஆர்வக்கோளாறுல, "மாமூலுக்கு வருமான வரி விலக்கு உண்டு"ன்னு ஸ்டேஷன் வாசல்ல போர்டு வச்சுட்டாராம்!"