மாமூலன்

bookmark

"டாக்டர்! இன்னைக்கு ஆபரேஷன் நடக்கப்போற அந்த பேஷண்டுக்கு கல்யாண நாள், பிறந்தநாள் இரண்டுமே இன்னைக்குத்தானாம்!"

"அடுத்த வருஷம் முப்பெரும் நாளா அவங்க பிள்ளைங்க கொண்டாடுவாங்க!"

"அப்பா... அவரு என்னைக் கண்கலங்க வச்சிட்டாருப்பா...."

"என்னம்மா சொல்றே?"

"வெங்காயம், மிளகாய் நறுக்க வச்சிட்டாரு!"

"அரசியல் கட்சித் தொண்டரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது பெரிய வம்பா போச்சு?"

"என்ன பண்றாரு?"

"சாப்பாடு வச்சி, குழம்பு கொண்டு வர்றதுக்குள்ளே 'சோறு இங்கே. குழம்பு எங்கே?'ன்னு கோஷம் போட ஆரம்பிச்சிடுறாரு!"

"நான் போலீசிலே சேர்ந்த பிறகு பிறந்த பையன் இவன்."

"அப்படியா! என்ன பேரு வச்சிருக்கீங்க?"

"மாமூலன்!"

"உங்க பொண்ணை யாரோ ஒருத்தன் கூட்டிக்கிட்டு ஓடிட்டானாமே! உங்களுக்காக நான் ரொம்ப வருத்தப்படுறேன்."

"நான் கூட்டிக்கிட்டு ஓடின அப்பாவிக்காக வருத்தப்படுறேன்."