தந்தையின் துன்புறுத்தல்
இட்லரும், இட்லரை விட ஏழு வயது சிறியவரான தங்கையும் பருவம் அடைந்தபோது இவருடைய தந்தை (அலாய்ஸ் இட்லர்) தன் இரண்டாவது மனைவியின் மூலம் இரு குழந்தைகளை பெற்றெடுத்தாக அறியப்படுகின்றது. இளமைக்காலத்தில் தந்தையின் கொடுமைக்கு தாயாரும் ஆளாக்கப்பட்டதாக பதிவெடுகள் கூறுகின்றன. தன் தந்தை எவ்வாறு தன்னையும் தன் தாயையும் அடித்து துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய மெயின் கேம்ப் என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று அறிகின்றோம். தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புறுவதை கண்டு அவர் மேல் அளவுகடந்த பாசம் கொண்டார் என்று தெரிகின்றது. அதே சமயம் அவர் தந்தைமேல் அளவுகடந்த வெறுப்பையும் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. பொருளாதார சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது தெரிகின்றது.
