ஓவியராதல்
இட்லர் தன் படிப்பில் ஏற்பட்ட மந்த நிலையை தன் தந்தையின் கொடுமைக்கு கொடுத்த பரிசாகவும் தன் தந்தை தான் அவரைபோன்று சுங்க அதிகாரி பணியில் அமரவேண்டும் என்ற கனவை பொய்யாக்கிய திருப்தி கிடைத்ததாக தன் சுயசரிதையில் இட்லர் விளக்கியுள்ளார். இதனால் அவர் ஓவியராகும் கனவை மெய்ப்பித்தாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய தந்தை 3 ஜனவரி, 1903 அன்று மரணமடைந்தார். அதன் பின் அவருடைய கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. இட்லர் தம் 16 ம் வயதில் உயர் நிலை பள்ளி படிப்பை டிப்ளாமா பட்டம் பெறாதநிலையில் நிறுத்திக்கொண்டதாக பதிவெடுகள் கூறுகின்றன.
