தங்கச் சிலை!

bookmark

1. "ஆனாலும் நம்ம தலைவர் இவ்வளவு அப்பாவியா இருக்கக்கூடாது..." 

"என்னாச்சு..?

"தொங்கு பாராளுமன்றம் அமைஞ்சா எப்படி ஏறிப்போறதுன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்... நல்ல வேளையா அப்படி ஆகலைன்னு சொல்றார்!"

ப.உமா மகேஸ்வரி

2. "போலீஸ்காரன் உன் வீட்லயே திருடியிருக்கான்... பார்த்துக்கிட்டு சும்மாவா இருந்தே..?"

"தடுத்தா மாமூல் தரமாட்டேன்னு பயமுறுத்தினான் சார்!"

ஜா.குமார்

3. "விளம்பரத்தைப் பார்த்து எதுக்கு அழறே...?"

"இது சீரியல் நடிகைகள் நடிச்ச விளம்பரமாச்சே..!"

அம்பை தேவா

4. "எதுக்குய்யா குப்பை வண்டிக்காரன் என்னைப் பார்க்க வந்திருக்கான்..?"

"உங்க அறிக்கைகளை மக்கும் குப்பையில சேர்க்கறதா.... மக்காத குப்பையில சேர்க்கறதான்னு கேட்கவாம் தலைவரே!"

ம.விருதுராஜா

5. "நகைக்கடைக்காரர் மகளை கல்யாணம் பண்ணிணியே, எப்படி போவுது?"

"பொண்ணு, "தங்கச் சிலை" மாதிரி இருக்காள்ன்னு வாய் தவறி சொல்லிட்டேன், இப்போ, என் மாமனாரும், மாமியாரும், "செய்கூலி" வேணும்ன்னு அடம் பிடிக்கிறாங்க!"

கு.அருணாசலம்

6. "தலைவர் ரவுசு தாங்க முடியலையா... அப்படி என்ன பண்றார்?"

"அவருக்கு ராசியான நம்பர் ஒன்பதாம். அதனால ஒன்பது டிஜிட்ல செல்போன் நம்பர் கேக்கறார்!"