சிக்கனம்

bookmark

1. "வேலைக்காரியைக் கூட்டிக்கிட்டு எதுக்கு சினிமாவுக்குப் போனீங்க...?" 

"அந்தப் படத்தைக் குடும்பத்தோட போய் பார்க்க முடியாதுன்னு நீதானே சொன்னே!"


2. "எல்லா விஷயத்திலும் சிக்கனத்தைக் கடைபிடிக்கணும்னு சொன்னதை தலைவர் தப்பா புரிஞ்சுக்கிட்டாரா... எப்படி?"

"ஏழுமலைங்கிற தன்னோட பேரை, "நாலுமலை"ன்னு மாத்திக்கிட்டாரு!"

3. "டாக்டர்.... இந்தக் கண்ணாடியைப் போட்டுக்கிட்டு பார்த்தா, எல்லாமே தூரதூர தெரியுது!"

"நீங்க எதைப் பார்த்தீங்க?"

"சூரியன், சந்திரன், நட்சத்திரங்களையெல்லாம் பார்த்தேன்!"

4. "தலைவருக்கு இங்கிலீஷ்ல பேசணும்னு ரொம்ப நாளா ஆசை... அதை இப்ப தீர்த்துக்கிட்டாரு!"

"அதுக்காக, ஹலோ மைக் டெஸ்டிங் ஒன், டூ, த்ரீன்னு நூறு வரைக்குமா சொல்றது..."