கிரெடிட் கார்டு

bookmark

1. "என்னங்க.... கல்யாணத்துக்கு வந்துட்டு, மொய் எழுதாமப் போறீங்க?" 

"எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுங்க!"


2. "தண்ணியடிச்சுட்டு தள்ளாடித் தள்ளாடி பணம் எடுக்க ஏ.டி.எம்.முக்கு போனது தப்பாப் போச்சா.... ஏன் தலைவரே?"

"பேலன்ஸ் இல்லைன்னு சொல்லிட்டாங்களே....!"


3. "ஆனாலும் அந்த ஆள் அநியாயத்துக்கு அப்பாவியா இருக்காரு...."

"என்ன ஆச்சு...?"

"போஸ்ட் ஆபீஸ்ல போய் கிரெடிட் கார்டு கேக்கறாரு...!"


4. "நீங்க இப்ப மிகப்பெரிய கண்டத்துல இருக்கீங்க..."

"ஆமா... நானும் படிச்சிருக்கேன்! ஆசியாதான் உலகத்துலயே பெரிய கண்டம்னு!"


5. "இந்த மருந்தை வெறும் வயித்துலதான் சாப்பிடணும்..."

"பனியன்கூட போட்டிருக்கக்கூடாதா டாக்டர்...?"