செக் புக்

bookmark

1. "நம்ம தலைவர் நாலு ஒபாமாவுக்கு சமம்னு சொன்னது தப்பாப் போச்சு!" 

"ஏன் என்னாச்சு?"

"நாலு தடவை, "ஒபாமா... ஒபாமா... "ன்னு கூப்பிட்டா தான் திரும்பியே பாக்கறார்!"


2. "உங்க டேபிள்ல இருந்த இந்த டானிக் ரொம்ப காரமா இருக்கு டாக்டர்..."

"யோவ்... அது நான் சாப்பிடறதுக்காக வச்சிருக்கற ஊறுகாய்..!"

3. "பைனாகுலரை வச்சிக்கிட்டு உங்க அம்மா என்னடா பாக்கறாங்க..?"

"எட்டு மைல் தூரத்தில் ஒரு அழகான பொண்ணு இருக்குன்னு தரகர் சொல்லிட்டுப் போனாராம்!"

4. "அந்த ஆட்டோ டிரைவர் குடிகாரனா...? எப்படிச் சொல்ற?"

"குவாட்டருக்கு மேல போட்டுக் கொடுன்னு சொல்றாரே...!"


5. "பழைய புத்தகக் கடையில அப்படி என்ன புக் கேட்டீங்க... இந்தத் திட்டு திட்டறாங்க!"

"செக் புக் இருக்கான்னு கேட்டேன்..."