கால் சென்டர்
"அவர் ஏன் தனது குடையில் ஓட்டை போட்டு உள்ளார்?"
"மழை நின்று விட்டதா என்று பார்க்க."
"கால் சென்டரில் வேலை கிடைத்தும் வேண்டாம்னு சொல்லிட்டியா... ஏன்?"
"எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான் ஆசை."
"வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான்"
"நாலு செண்ட் தான்"
"ஏன்..ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாமே..."
எல்.கே.ஜி விஞ்ஞானி
அப்பா: ஏன்டா அந்த காக்காவ தண்ணில முக்கி முக்கி எடுக்குற?
மகன்: எங்க தமிழ் டீச்சர் 'காகம் கரையும்'னு சொன்னாங்க அதான் ட்ரை பண்ணி பார்க்குறேன்.
"டைம் இஸ் கோல்டுன்னு சொன்னா, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற?"
"அதை அடமானம் வைக்க முடியாதே"
