கடிமணப் படலம் - 1262

1262.
‘கல். ஆர் மலர் சூழ் கழி. வார் பொழிலோடு.
எல்லாம் உளஆயினும். என் மனமோ-
சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது ஆம்
மெல் ஓதியர்தாம் விளையாடு இடமே!*
கல் ஆர் மலர்சூழ் கழி. வார் பொழிலோடு- செய்குன்றுகளும்.
நிறைந்தமலர் சூழ்ந்த உப்பங்கழிகளும். நீண்ட மலர்ச் சோலைகளும்
விளையாடும்; எல்லாம் உள ஆயினும் - மற்றும் பல ஆடிடங்களும்
இடங்களாக இருக்கவும்; சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது
ஆம் - பேசும் சொற்களைப் பெறுதற்கரிய அமுதச் சுவையினும்
இனியவாகப் பேசுகின்ற; மெல் ஓதியர்தாம் விளையாடு இடம் -
மெல்லிய கூந்தலையுடைய அப்பெண்டிர் விளையாடும் இடமாகக்
கொண்டது; என் மனமோ - என் மனந்தானோ?
உயர்பண்புடைய மகளிர். தலைவனது நெஞ்சினையே
விளையாடுகளமாகக் கொள்வர். ஓயா நினைவில் அவர்
உள்ளத்துலாவுதலால் விளையாடிடம் ஆயிற்று நெஞ்சம் என்க. மலைச்
சோலை. கழிக்கானல் மலர்ப் பூங்கா எனப் பலப்பல ஆடிடங்கள்.
அரசிளங் குமரியாகிய அவளுக்கு விளையாடக் காத்திருக்க. என்
மனத்தை ஏன் அவள் ஆடுகளமாகத் தேர்ந்தாளோ என
வியந்தவாறு. 18