எழுச்சிப் படலம் - 859
உருவெளிப்பாடு கண்டு பெண்கள் கூறியது
நங்கையர் திரளின் செலவு
859.
நாறு பூங் குழல் நங்கையர் கண்ணின் நீர்
ஊறு நேர்வந்து உருவு வெளிப்பட.
‘மாறு கொண்டனை வந்தனை ஆகில். வந்து
ஏறு தேர்’ எனக் கைகள் இழிச்சுவார்.
நாறு பூங்குழல்- மணம் வீசுகின்ற மலரையணிந்த கூந்தலையுடைய;
நங்கையர் - பெண்கள்; கண்ணின் - (தம்) கண்களில்; நீர் ஊறும் -
நீர் சுரக்குமாறு; நேர்வந்து உருவு- நேரே வந்து உருவம்; வெளிப்பட
- வெளிப்பட்டுத் தோன்ற (தம் காதலர் நேரே வந்ததாகக் கருதி அந்த
உருவத்தைப் பார்த்து); மாறு கொண்டனை - எம்மை எதிர்கொண்டு
வந்தாயானால்; வந்து - (இப்பொழுது) வந்து; தேர் ஏறு - (இந்தத்)
தேரிலே ஏறிக் கொள்க; என - என்று சொல்லி; கைகள் இழிச்சுவார்-
(தம் ) கைகளைத் தாழ்த்துவார் (அழைக்கலாயினர்). 43
