அமிதாப் பச்சன் - 3
பின்னாளில் அவருக்கு தசைநார்கள் பலவீன முற்ற நோய் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. எனவே திரைப்படத்துறையை விட்டு விலகி விட்டு அரசியலில் நுழைய முடிவுசெய்தார். அந்தக் கட்டத்தில் அவருக்கு அவநம்பிக்கை உணர்வு மேலோங்கியது. எனவே புதிய திரைப்படம் எப்படி வரவேற்கப்படுமோ என்ற மனக்கவலையை வெளிப்படுத்தினார். ஒவ்வொருபட வெளியீட்டின்போது அவர் எதிர்மறையாகவே சொல்லுவார்: 'ஹே!இந்தப் படம் தள்ளாடி வீழ்ச்சிபெறும்'(படம் தோல்வி காணும்).
1984ல் அமிதாப் நடிப்புத்துறையில் இருந்து விலகிக்கொண்டு அரசியல் துறையில் குறுகிய காலத்திற்குள் நுழைந்தார் அவருடைய குடும்ப நண்பர் ராஜிவ்காந்தியின் ஆதரவே அதற்குரிய காரணமாகும். அலகாபாத் தொகுதியில் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் எதிர்த்துப் போட்டியிட்டார். அப்பொதுத் தேர்தலில் எச்.என்.பகுகுணாவை அதிக பட்ச வாக்குகள் வித்தியாசம் காட்டி (68.2 சதவீதம் வாக்குகள் வென்றார். ஆனாலும் அவரது அரசியல் வாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை! மூன்றே ஆண்டுகளுக்குள் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. அரசியலே ஒரு குட்டை என்று சொல்ல நேர்ந்தது. அதன்காரணமாவது அவரும் அவரது சகோதரரும் போபர்ஸ் பீரங்கி ஊழலில் தொடர்புடையவர்கள் என்று வெளிவந்த பத்திரிகைச்செய்தி அவரை நீதிமன்றம் போகச்செய்து குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டியே அவர் பதவி விலகினார்.
அவரின் பழைய நண்பர் அமர்சிங் அவரின் ஏபிசிஎல் கம்பெனி நஷ்டமுற்று பணநெருக்கடி ஏற்பட்டதால் உதவிசெய்தார். அதன்விளைவாக அமிதாப் நண்பரின் அரசியல் கட்சியை ஆதரித்தார் அந்த சமாஜ்வாடி கட்சியில் மனைவி ஜெயா சேர்ந்து பிறகு ராஜ்யசபா உறுப்பினரானார். மனைவிக்காக பச்சன் அவர் சேர்ந்துள்ள கட்சிக்கு அதாவது சமாஜ்வாடிக்கயாக பல உதவிகள் செய்யலானார். விளம்பரங்கள் அளித்தல், அரசியல் போராட்டக்கூட்டங்கள் நடத்துதல் அதில் அடங்கும் இத்தகைய நடவடிக்கைகள் அவரை தொல்லையில் வலுக்கட்டாயமாக ஆழ்த்தியது. அதன்விளைவாக, நீதிமன்றங்கள் செல்ல வேண்டியதாயிற்று. பச்சன் தன்னை ஒரு விவசாயி என்று கூறி, சட்டப்பூர்வமான எழுத்துப் படிவத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் அது உண்மையல்ல என்று அவரை வழக்கில் சிக்கவைத்த சம்பவம் அவரை அலைக்கழித்தது.
பச்சனுக்கு எதிராகப் பத்திரிகைச் செய்தித்தடை அவர் படத்துறையில் உச்சத்தில் இருந்தவருடங்களில் கொணரப்பட்டது. அதுவும் ஓரு 15 ஆண்டுக்காலமாக அதுநிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 'ஸ்டார்டஸ்ட்' போன்ற திரைப்பட சம்பந்தப்பட்ட ஒருசில பத்திரிகைகள் அதற்கான காரணமாயின. தனது சுயகாப்பிற்காகவே 1989 இறுதி வரை அவரது படப்பிடிப்புத் தளங்களுக்குப் பத்திரிகையாளர்கள் வரக்கூடாதெனத் தடுத்திருந்ததாக பச்சன் தரப்பில் சொல்லப்பட்டது.
1988ல் பச்சன் மீண்டும் திரையுலகம் திரும்பினார். 'ஷாஹேன்ஷா' என்னும் பெயர்கொண்ட திரைப்படத்திற்காக அவர் பிரவேசித்தார். படத்திற்குப் பாக்ஸ்ஆபீஸ் வெற்றி கிடைத்தது. ஏனெனில் பச்சனின் மீள்வருகை பற்றிய செய்தி பிரசித்தியே காரணமாகும்! ஆனால் இவ்வெற்றியோ அவருக்குத்தொடர்ந்து கிடைக்கவில்லை. அடுத்து வந்த படங்கள் தோல்வியைத்தழுவின. எனவே அவரது நட்சத்திரப்புகழ் ஒளிமங்கலானது என்றாலும் 1991ல் 'ஹம்' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார். அது அன்றைய சரிவைச் சரிக்கட்டுவதாக தோற்றப்பொலிவு கொடுத்தாலும், சொற்ப காலத்திற்குப்பின் மந்தகதி தொடர்ந்தது. பெருவெற்றிப்படங்கள் தராத நிலை நீடித்தாலும், ஒன்றைக் குறிப்பிட்டாகவேண்டும். இரண்டாம் தடவையாக பச்சன் தேசிய விருது வாங்கினார் அதுவும் இந்தக் காலகட்டத்தில்! 1990ல் வெளிவந்த 'அக்னிபாத்' என்ற மாபியாதாதா படத்திற்காக அது தரப்பட்டது!! இந்த வருடங்களே அவர் திரையில் தோன்றிய கடைசி வருடங்கள் ஆகும். 1992ல் வந்த 'குடாகாவா ' படத்திற்குப்பின் பச்சன் ஐந்தாண்டு ஓய்வைச் சுயமாகவே விரும்பி மேற்கொண்டார். 1994ல் தாமதம் தடங்கல்பட்டு வெளிவந்த 'இன்ஸானியாத்' படம் பாக்ஸ்ஆபீஸ் தோல்விப்படமாகவே அமைந்தது.
பச்சன் தாற்காலிக ஓய்வுகாலத்தில் படத்தயாரிப்பாளராக மாறினார். ஆங்கில அகரவரிசைப்படி ஏபிசி லிமிடெட் கம்பெனி 1996ல் தொடங்கினார். (அமிதாப் பச்சன் கார்பரேஷன் கம்பெனி) அவரது தொலைதூர நோக்கத்தின் படி 10 பில்லியன் (கிட்டத்தட்ட 250 அமெரிக்க டாலர்கள்) 2000 வருடத்திற்குள் குவிய வேண்டும். ஏபீஸீஎல் வரைமுறைத்திட்டத்தின் படி, இந்தியதேசக் கேளிக்கைத் தொழிற்சாலை உற்பத்திகள் சேவைப் பணிகள் உள்பட தேசிய அளவில் விஸ்தாரம் ஆக்கப் படவேண்டும். முக்கிய நீரோட்டமான இயக்கங்கள்படி, வர்த்தகத் திரைப்படங்கள் தயாரித்தல், விநியோகம் செய்தல், ஆடியோ ஒலிநாடக்கள், வீடியோ குறுந்தகடுகள் உற்பத்தி செய்தல், தொலைக்காட்சி மென்பொருள்கள் சந்தைக்குக கொண்டு வருதல், நிகழ்ச்சி மேலாண்மை, மற்றும் பிரபலஸ்தர்கள் பங்கு பெறவேண்டும் என்ற பற்பல செயல்திட்டங்கள் கொண்டு 1996ல் கம்பெனி உருவாக்கப்பட்டது. உருவான உடனுக்குடன் கம்பெனியின் முதல்திரைப்படம் வந்தது. அதன் முதல்படம் 'தேரே மேரே சப்னே' வசூல்வெற்றி பெறவில்லை! ஆயினும் அர்ஷாத் வார்சி மற்றும் தென்னாட்டில் சிம்ரன் போன்ற நட்சத்திரங்கள் உதயமாக அது வழிவகுத்தது. பின்னரும் அவர் கம்பெனி ஒருசில படங்கள் தயாரித்தும் அதில் ஒன்று கூட உருப்படியான பலன்தரவில்லை. ஏபிசிஎல் தயாரிப்புகள் எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக அமையவில்லை.
1997ல் தனது கம்பெனியால் தயாரிக்கப்பட்ட படம் 'மிரிட்யூதத்தா ' மூலமாக பச்சன் மறுவருகை செய்தார் மிரிட்யூதத்தா அவரது ஏற்கனவே செய்யப்பட்ட சாதனைகளுக்கான அங்கீகாரம் அளிப்பினும் அவரை அதிரடி நாயகன் என்று ஏற்றுக்கொண்டாலும் அப்படம் விமர்சனம் மற்றும் வியாபார ரீதியில் தோல்வியே தந்தது. 1996ல் முக்கியப்பொறுப்பேற்று பெங்களுரில் நிகழ்த்திய உலகப்பேரழகியர் அணிவரிசை அரங்கம் பலமில்லியன் பேரிழப்பை பச்சனுக்குத் தந்தது! நிதிநெருக்கடிகள் உடன் வழக்கு விவகாரங்கள் பற்பல நிறுவனத்தைச் சூழ்ந்து கொண்டன! அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு பலபுகார்கள் வந்தன. முக்கியமாக உயர்மட்ட மேலாளர்களுக்காக மிக அதிகப்பட்சம் பணம் 1977ல் வழங்கப்பட்டது கம்பெனியில் வீழ்ச்சிக்கு அடிகோலியது என்பதே ஆகும். மேலும் இந்தியத் தொழில்களின் கழகம் அதை ஓரு தோல்வி நிறுவனமாகவே அறிவித்தது. கம்பெனி நிர்வாகமும் அதற்குரிய காரணமாயிற்று. 1999ல் பச்சன் அவரது மும்பை பங்களாவையே(பிராக்தீட்ஷா) விற்க முனைந்தபோது பாம்பே உயர்நீதிமன்றம் அதற்குக்கட்டுப்பாடு விதித்தது. ஏற்கனவே கனராவங்கியிடம் பெறப்பட்ட கடன்கள் நிலுவையில் இருப்பதும் அதற்குரிய காரணமாக அமைந்தது. எனினும் பச்சன் தனது பங்களாவை விற்காது சஹாரா இந்திய நிதி நிறுவனத்திடம் அடமானம் வைத்திருப்பதாக நீதிமன்றத்தில் மன்றாடினார். அதுகூட அவர் கம்பெனி நிதிநிலை மேம்படவே அவ்வாறு செய்திருப்பதாக முறையிட்டார்.
