அமிதாப் பச்சன் - 4
பச்சன் நடிப்புத்தொழில் வாழ்க்கையைப் புதுப்பிக்க வேண்டி துறையில் மும்முரமானார். 1988ல் வெளிவந்த அவர்படம் 'பேடே மியான் சோடே மியான்' சுமாரான வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதேபோல் 1999ல் வெளிவந்த 'சூர்யவன்சம்' நேர்முகமான மதிப்புரைகளே ஈட்டியது. அதே வருடத்தில் வெளியிடப்பட்ட 'லால் பாட்ஷா' மற்றும் 'ஹிந்துஸ்தான் கி கஸம்' போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் தோல்வியே கண்டன.
2000ம் ஆண்டில் பச்சன் பிரபல பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஆட்டமான 'யார் மில்லியனராக விரும்புவது?' என்பதன் இந்தி 'கவுன் பனேகா க்ரோர்பதி' நிகழ்ச்சி அதன் உபசரனையாளராக நடத்த முன் வந்தார். பிறநாடுகளைப்போலவே (கவுன் பனேக க்ரோர்பதி) அந்நிகழ்ச்சி எடுத்தவுடனேயே இமாலய வெற்றிகண்டது. நவம்பர் 2000ல் கனரா வங்கி அவருக்கு எதிராக தொடுத்த சட்டபூர்வமான வழக்கு விலக்கிக்கொள்ளப்பட்டது. கனரா வங்கியால் பச்சனுக்கு உதவிகரமாக அமைந்தது. மேலும் அவரே வழங்குநர் ஆகி 2005 நவம்பர் நிகழ்ச்சியை நடத்திக்கொடுத்தார்.அந்த வெற்றி அவருக்குரித்தான சினிமாப்புகழை மறுபடி தந்தது. 2009ல் வெளிவந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்'(ஸ்லம்டாக் மில்லியனர்) படம் ஆஸ்கார் விருதுவென்றது அனைவரும் அறிந்ததே! அந்த வார்த்தை விளையாட்டில் எழுப்பப்பட்ட துவக்கவினா: யார் கோட்டீஸ்வரன் ஆவது? 'ஜன்ஜீர் படத்தின் நாயகன் யார்?' என்பதேயாகும். அந்த வினாவிற்குரிய சரியான விடை அமிதாப்பச்சன்!! பெரோஸ்கான் ; அமிதாப்பச்சனாக ஒருகாட்சித்தோற்றமளித்தார். அனில்கபூரோ போட்டியின் உபசரிப்பாளராகத் தோன்றினார்.
2000 மே மாதம் 7ஆம் தேதி பச்சனின் தோற்றத்தோடு வெளிவந்த யாஷ் சோப்ராவின் ஹிட் படம் 'மொஹாபத்தீன்' ஆதித்யா சோப்ரா இயக்கினார். நடிகர் ஷத்ருகன் சின்ஹாவிற்கு நடிப்பில் போட்டியாக பச்சன்அப்படத்தில் ஓருவயதான கண்டிப்பானவராக செவ்வனே அந்தப் பாத்திரத்தைச் சித்திரித்துக்காட்டினார். பச்சன் குலபதியாக அதாவது குடும்ப முதல்வனாக நடித்து வெற்றிபெற்ற பிற ஹிட் படங்களாவன: ஏக்ரஸ்தா , தி பாண்ட் ஆப் லவ் (2001), கபி குஷி கபி காம் (2001), பாக்பன் (2003) நடிகராகத் தொடர்ந்து பல்வேறுபட்ட பாத்திரங்களில் அவர்தோன்றியமையால் வெகுவானப் பாராட்டுதல்கள் பெறலாயினார். அக்ஸ் (2001), ஆங்கன் (2002), காக்கி (2004),தேவ் மற்றும் பிளாக் (2005) போன்ற படங்கள் அவ்வரிசையில் இடம்பெற்றன. இந்தப் புத்தெழுச்சியின் பலாபலனாக அமிதாப் பலதரப்பட்ட தயாரிப்புகள்,சேவைகளில் தொலைக்காட்சி மற்றும் விளம்பர ஒளிப்பலகைகள் சம்பந்தப்பட்டதில் மும்முரமாக ஈடுபட்டார். 2005 மற்றும் 2006ல் அவர் தன்மைந்தன் அபிஷேக்குடன் பல ஹிட் படங்கள் சேர்ந்தளித்தார், பண்ட்டி அவுர் பப்லி (2005), கபி அல்விடா நா கெஹ்னா (2006) எல்லாமே பாக்ஸ்ஆபீஸ் வெற்றிப்படங்களாகும். அவரது அடுத்த வெளியீடுகள் 2006, 2007 வருடங்கள் பாபுல் (2006) ஏக்லவ்யா நிஷாப்த் (2007) போன்ற பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெறவில்லையாயினும் அவரது நடிப்பாற்றல் அப்படங்களில் நன்கு வெளிப்பட்டதாக விமர்சனதாரிகள் கருத்து அபிப்பிராயங்கள் கூறினார். மேலும் கன்னடப்படமான அம்ருத்ததாரே படத்தில் கௌரவத்தோற்றம் அளித்தார். அப்படம் நாகத்திஹல்லி சந்திரசேகரால் இயக்கப்பட்டதாகும்.
அவரது மற்ற இருதிரைப் படங்களான சீனி காம் உடன் பல புகழ் பெற்ற நடிகர்கள் நடித்த திரைப்படம் ஷூட்அவுட் அட் லோகண்ட்வாலா 2007 மே மாதம் வெளிவந்தன. இரண்டாம் படம் ஷூட்அவுட் அட் லோகண்ட்வாளா பாக்ஸ் ஆபிஸில் வசூலில் நன்றாகப் போய் வெற்றி என்றும் அறிவிக்கப்பட்டது. முதலாம் திரைப் படம் சீனி காம் தாமதாகத் தொடங்கிய பிறகு ஈடு கட்டவே மொத்தத்தில் சராசரி வெற்றி திரைப்படம் என்றே அறிவிக்கப் பட்டது.
2007 ஆகஸ்டில் இமாலய வெற்றி பெற்ற 'ஷோலே' வின் மறுபதிப்பு 'ராம் கோபால் வர்மா கி ஆக்' பாக்ஸ் ஆபீஸில் பாதாளச்சரிவாக படுதோல்வி கண்டதால் விமர்சனதாரிகளின் பார்வையிலும் பரிதாபகரமே தென்பட்டது.
அவரின் முதலாவது ஆங்கிலப்படம் ரீட்டுபர்னோ கோஷின் 'தி லாஸ்ட் லியர்' 2007 செப்டம்பர் 9 அன்று டோரன்டோவில் நிகழ்ந்த சர்வதேசத் திரைப்பட விழாவின் முதல்வெளியீட்டுக் காட்சியின் பொழுது நேர்முகப்பாராட்டுதல்கள் விமர்சனதாரிகளிடமிருந்து பெற்றார். அப்படம் அவரது பிளாக் படத்திற்குப்பின் நடிப்பில் மிகச்சிறந்ததென்று உயர்த்திக் கூறினர். பச்சன் அவரது முதல் உலகளாவிய திரைப்படத்தில் துணைக்கதாபாத்திரத்தில் நடித்தார். 'ஷாந்தாராம்' என்ற அந்தப் படத்தை மீரா நாயர் இயக்க, ஹாலிவுட் பிரபலநடிகர் ஜானி டெப்ப் முக்கியப்பாத்திரத்தில் நடித்தார். படப்பிடிப்பு 2008 பிப்ரவரியில் தொடங்கவேண்டியது. ஹாலிவுட் கதை ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் செப்டெம்பரில் நிகழ தள்ளிப் போடப்பட்டது.
'பூத்நாத்' என்ற படத்தில் தலைப்பிற்கேற்ற பேய் வேடத்தில் அவரே நடித்தார். 2008 மே 9 அன்று அதுவெளியானது. ஜூன் 2008ல் 'சர்க்கார் ராஜ்' படம் அவரின் 2005 'சர்க்கார் ' படக்கதையின் பின்தொடர் கதையாக அமைந்தது. அது பாக்ஸ்ஆபீஸில் நேர்முக ஆதரவுபெற்றது.
2008 டிசம்பர் 8 அன்று பெற்ற நேரடி 'எர்த்' லைவ் எர்த் ஜோன் போன் சோவியுடன் உபசரனையாளர் என பங்கு கொண்டார். பம்பாயில் அது நடைபெற்றது. 2009 ஜனவரி, 26ல் மும்பை அந்தேரியில் திறக்கப்பட்ட கோகிலாபென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரி விழாநாளில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று பெருமைப் படுத்தினார்.
2005 நவம்பரில் அமிதாப் பச்சன் லீலாவதி மருத்துவமனையில் உடனடி அவசரச்சிகிச்கைப்பிரிவில் சேர்க்கப் பட்டார். ஏனெனில், சிறுகுடலில் குருட்டுஅடைப்பு காண நேர்ந்தது. வெகுநாட்களுக்கு முன் வலிஅதிகம் என்று குறைபட்டுக்கொண்டிருந்தது காரணமாகும். அவர் உடல்நலம் மீளப்பெறவேண்டிய காலகட்டத்தில் பல திட்டங்கள் அப்படியே நிறுத்தவேண்டியதாயிற்று. அதில் முக்கியமாகக்குறிப்பிட வேண்டியது, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'கவுன் பனேகா குரோர்பதியும் அடங்கும்! 2006 மார்ச்சில் அந்தப் பணிநோக்கி அமிதாப் மீண்டும் திரும்பினார்.
பச்சன் தனது ஆழ்ந்த ஏற்றஇறக்கம் காட்டும் குரல்வளத்திற்குச் சொந்தக்காரர் ஆவார். அந்தநேர்த்தியான குரலால் கதைசொல்பவர், பின்ணணிப்பாடகர், நிகழ்ச்சி வழங்குநர் ஆகிய பலபணிகளை மேற்கொண்டார். புகழ்பெற்ற வங்க இயக்குநர் சத்யஜித்ரே அவரது அபாரக்குரல்அழகால் அதன்மேல் நல்அபிப்பிராயம் கொண்டிருந்ததால், தன் 'ஷத்ரன்ஜ் கி கிலாடி' படத்திற்காக விளக்க உரையாளராகப் பயன்படுத்திக்கொண்டதும் பெருமைதரும் சம்பவமாகும். அப்படத்தில் அமிதாப்பிற்கேற்ற வேடம் அமைந்தது. இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவெனில் பச்சன் திரைபடத்துறைக்கு வருமுன் அகில இந்தியவானொலி அறிவிப்பாளர் வேலைக்கு விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
2007ல் ஆட்சிப்பிடிக்க உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற மாநில சட்டமன்றத்தேர்தலில் பச்சன் முலாயம் அரசின் அருஞ்சாதனைகளை விளக்கி ஒருதிரைப்படம் உருவாக்கினார். எனினும் அத்தேர்தலில் சமாஜ்வாடிக்கட்சி தோல்விகண்டு மாயாவதி பதவிக்கு வரநேர்ந்தது.
நிலமற்ற தலீத் விவசாயிகள் வசமிருந்த பயிர்நிலத்தை அமிதாப் வாங்கியுள்ளார் என்ற காரணத்தால், 2007 ஜூன் 2ல் பைஸாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது . போலி ஆவணம் தயாரித்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்படும் என்ற வதந்தியும் கிளம்பியது. அவர் தன்னை ஒரு விவசாயி என்று கூறியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 2007 ஜூலை 19ல் அவதூறு கிளம்பியதால் அமிதாப் உத்தரபிரதேசம் பாரபங்கி மற்றும் புனே நிலங்களை திருப்பி அளித்தார். அதுமட்டுமின்றி மகாராஷ்டிர முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு பூனாவில் உள்ள தனது நிலங்களை தானமாக வழங்கிவிட கடிதம் எழுதி அனுப்பினார். ஆயினும் லக்னோ நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்து நிலநன்கொடையை நிறுத்தச் செய்தது. ஏற்கனவே இருந்த நிலையையே மறுபடி நிலைநிறுத்த ஆணை பிறப்பித்தது.
2007 அக்டோபர் 12ல் பச்சன் பாராபங்கி ஜில்லா தவுலத்புர் கிராமத்தில் உள்ள நிலத்தின்மேல் இருந்த உரிமையைக் கைவிட்டார். 2007 டிசம்பர் 11ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் லக்னோ பெஞ்சு அவரை வில்லங்கமற்றவர் என்று ஒப்புக்கொண்டு பாராபங்கி ஜில்லாவில் பச்சனுக்கு முறைகேடாக நிலம் வழங்கப்படவில்லை என்றும் தீர்ப்பளித்தது. லக்னோ ஒற்றை நீதிபதி கொண்ட பெஞ்சு தெரிவித்த கருத்தின்படி, பச்சன் மீது எந்த முகாந்திரமும் இல்லை வருமானத்துறைப் பத்திரங்கள் போலியாகவும் தயாரிக்கப் படவில்லை எனவும் அவர் அத்தகைய ஆவணங்களில் ரகசியமாக எதையும் பதிவு செய்யவில்லை எனவும் தெரிவித்தது .
பாரபங்கி நிலசம்பந்தாக நல்ல சாதககமான தீர்ப்பு வந்ததும் அமிதாப் பச்சன் மகாராஷ்டிர அரசாங்கத்திற்கு மறுபடி கடிதம் எழுதினார் அதன்படி பூனா ஜில்லா மாவல் தேசில் இடத்தில் உள்ள தனது நிலத்தை ஒப்படைக்க விரும்பவில்லை என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.
2008 ஜனவரியில் அரசியல்பேரணி ஒன்றில் ராஜ்தாக்ரே தன் நவநிர்மாண சேனா ஆதரவாளர்கள் முன்னிலையில் அமிதாப்பை குறிவைத்து கண்டனக்கணை தொடுத்தார்! 'வசிப்பதோ மகாராஷ்டிரம் ஆனால் வளர்ப்பதோ சொந்தமாநிலம்' என்று சாடினார்! உத்திரப் பிரதேசத்தில் பாராபங்கியில் ஒருபள்ளிக் கூடம் தன்மருமகள் நடிகை ஐஸ்வர்ராயின் பேரில் தொடங்கியது அவருக்கு எரிச்சலூட்டியது. மகாராஷ்டிரத்தில் இல்லாமல் உத்திரப்பிரதேசத்தில் தொடங்கியது அவருக்குப் பிடிக்கவில்லை! ஆனால் அதற்கு அடிப்படை காரணம் உண்டு அதாவது, தன்மகன் அபிஷேக் ஐஸ்வர்யாராயின் திருமணத்திற்கு பால்தாக்கரே மற்றும் உத்தவ்விற்கு அழைப்பிதழ் தந்துவிட்டு ராஜ்தாக்ரேவுக்கு கொடுக்காததால் ஏற்பட்ட மனக்கசப்பே காரணம் ஆனது.
ராஜ்தாக்ரேயின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் தரவேண்டி, பச்சனின் மனைவி ஜெயா பச்சன் தாங்கள் மும்பையிலும் பள்ளி தொடங்கத்தயார் எனவும் அதற்கு உரிய நிலம் ராஜ்தாக்ரே அளித்துதவவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 'நான் கேள்விப்பட்டுள்ளேன் ராஜ்தாக்ரேவிற்கு மும்பையில் அதிக உடைமைகள் உள்ளது கோகினூர்மில்கள் உள்பட!' 'எனவே அவர் விரும்பினால் நிலம் நன்கொடையாக வழங்கினால் ஐஸ்வர்ராயின் பேரில் பள்ளி தொடங்குவோம் இங்கே' மனைவியின் இந்தப் பதில் பற்றி அமிதாப் விளக்கம் ஏதும்சொல்லாமல் நழுவிவிட்டார்.
இதற்கு உடனடிப் பதிலடியாக பால் தாக்ரே மறுத்துப் பேசினார்: ' அமிதாப் பச்சன் ஒரு திறந்தமனதுடைய சிறந்தமனிதர் ஆவார். அவருக்கு மகாராஷ்டிரா மீது: அதிக அன்புண்டு. பலநிகழ்ச்சிகள் வாயிலாக அவர் அதை வெளிப்படுத்தியுள்ளார். அடிக்கடி அவரே மகாராஷ்ட்ரா அதுவும் மும்பைதான் அவருக்கு புகழும் அன்பும் கொடுத்துள்ளது. அவரே சொன்னதாவது 'நான் இன்றிருக்கும் இந்த நிலைக்குக் காரணம் மும்பை மக்கள் சொரிந்த அன்புப்பெருக்கே ஆகும்' எனவே மும்பைவாசிகள் அவரை ஓரு கலைஞனாகவே காண்கின்றனர். எனவே அவர்மீது குறுகிய நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுக்கள் அள்ளிவீசுதல் மடைமையேயாகும். மேலும் அவர் அகிலஉலகம் அளாவிய சூப்பர்ஸ்டாராவார். புவியெங்கும் மக்கள் அவர்மீது மதிப்பு மரியாதை வைத்துள்ளனர். இது யாராலும் மறுக்காத ஒன்றாகும். அமிதாப் இப்படிப்பட்ட அற்பக்குற்றச்சாட்டுக்கெல்லாம் பாதிக்கப்படாத வண்ணம் தனது நடிப்பின் மீது பெரும் அக்கறையைத் தொடர்ந்து செலுத்தவேண்டும்'
2008 மார்ச் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்தபின்னேரே ராஜ்ஜின் கண்டனத்திற்கு இறுதியில் அமிதாப் பதில் அளித்தார். உள்ஊர் செய்தி நிறுவனத்திற்கு தந்த பேட்டியின் போது சொன்னதாவது: அங்கொன்றும் இங்கொன்றும் சொல்லும் குற்றச்சாட்டுகள் வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே, நிச்சயம் நீங்கள் விரும்பும் அன்பான கவனத்திற்கு உகந்ததாக இருக்காது. அகில உலக இந்திய பிலிம் அகாடமி செய்தியாளர் கூட்டத்தில் வேறு மாநிலம் குடிபுகும் பிரச்சினை பற்றி கேட்ட போது அமிதாப் சொன்னார்: அது ஒவ்வொருவருடைய ஜீவாதர உரிமையாகும் அரசியல் சாசனப்படி யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வசிக்கலாம் அவர் மேலும் சொன்னார்: ராஜ்ஜின் விமரிசனங்கள் அவரை பாதிப்படைய வைக்கவில்லை என்று. இவ்வாறு எத்தனை தோல்விகள், போராட்டங்கள், வழக்குகள் என வந்தாலும் என்றும், இன்றும் நிலைத்து நிற்கும் ஜாம்பவானாக வாழ்கிறார் அமிதாப்பச்சன்.
