வெள்ளைக் கரிசாலைச் செடி முடி அடர்த்தியாக

வெள்ளைக் கரிசாலைச் செடி முடி அடர்த்தியாக

bookmark

 வெள்ளைக் கரிசாலைச் செடியைக் கசக்கி சிறிது நீர்விட்டு சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதில் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யை சம அளவுக்குக் கலக்கி, எண்ணெய் அடியில் மெழுகுப் பதத்தில் கசடு வரும் வரை காய்ச்சி இறக்கவும்.

கிட்டத்தட்ட 1 லிட்டர் தைலம் கிடைக்கும்.

அதில் மீண்டும் சம அளவு வெள்ளைக் கரிசாலைச் சாறு சேர்த்துக் காய்ச்ச வேண்டும்.

மறுபடியும் நீர் வற்றி இன்னும் அடர்த்தியான தைலம் கிடைக்கும்.

இதேபோல் ஏழு முறை காய்ச்சி எடுத்த தைலத்தைப் பயன்படுத்தினால், முடி கொட்டுவதைத் தடுக்கலாம், இளநரை வராது, உடல் சூடு தணியும், பொடுகும் நீங்கும், ஆரோக்கியமான அடர்த்தியான கேசம் கிடைக்கும்.