வெண்ணைப்பழம் (அவகோடா)
செரிமான கோளாறுகளை நீக்கும் தன்மையுடையது வெண்ணைப்பழம். மேலும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவற்றையும் சரிசெய்கிறது.
வெண்ணைப்பழம் வாய்துர்நாற்றத்தை போக்கி, சுவாச புத்துணர்ச்சி கிடைக்கச் செய்கிறது.
கண்புரைநோய், கண்தசை அழற்சி உள்ளிட்ட கண் சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்ய வெண்ணைப்பழம் பயன்படுகிறது.
உயர்இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றுக்கு நிவாரணியாக இந்த வெண்ணைப்பழம் இருக்கிறது.
வாதநோய் சரியாக, புற்றுநோய் வராமல் தடுக்க, சரும பாதுகாப்பிற்கு, கர்ப்பிணிகளின் நலத்திற்கு, எலும்புகளின் பலத்திற்கு,
ஆரோக்கியத்திற்கு என அனைத்திற்கும் வெண்ணைப்பழம் சாப்பிட்டு வர நன்மை கிடைக்கும்.
