வாழ்க்கை வரலாறு

bookmark

"பழக்க தோஷத்திலே என்னோட வாழ்க்கை வரலாறு நூல்லே ஒரு வரி எழுதினதாலே விற்கவே இல்லை."

"என்ன வரி.."

"இது என் சொந்தக் கற்பனை'ன்னு எழுதிட்டேன்."

"ஏன்டா, பீர் பாட்டிலை இப்படி அப்படி சுத்தி சுத்தி தொட்டு பாக்கற...?"

"எல்லா பக்கமும் நல்லா கூலிங்கா இருக்கான்னு பாக்கறேன்."

"ஐயா, எனக்கு ஏழு குழந்தைகள்... உற்பத்திக்கேத்தபடி சம்பளம் கூட்டிக் கொடுங்க."

"அந்த உற்பத்திக்கெல்லாம் சம்பளம் கூட்டித் தரமுடியாது... பேக்டரியிலேயே உற்பத்தியைக் கூட்டினவங்களுக்குத்தான் சம்பளம் கூட்ட முடியும்."

"ஜவுளிக்கடை பொம்மையைத் திருடிட்டு வரச் சொன்னா... பெண்ணைத் தூக்கிட்டு வந்து நிக்கறீங்களே! உங்களை....?"

"ஜவுளிக்கடை வாசல்ல ஆடாம அசையாம இவ நின்னிருக்கா, நான் பொம்மைன்னு நினைச்சி கொண்டு வந்துட்டேன்... தப்பா நினைக்காதே!"

"அப்பா... உப்பு விலை ரொம்ப மலிவுதானே?"

"ஆமா... அதுக்கென்ன?"

"சோத்துப் பானையிலே உப்பை அள்ளிப் போட்டதுக்கு அம்மா என்னை அடிச்சிட்டா!"