வாழைப்பழம் - கற்பூரவள்ளி
கற்பூரவள்ளி வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு செரிமான சக்தி அதிகரிக்கிறது. மேலும் உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் பெற்றது.
கற்பூரவள்ளி வாழைப்பழம் எலும்புகளுக்கு நல்லது. மேலும் தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆற உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்கவும், நரம்புகளை வலுப்படுத்தவும் இந்த பழம் உதவுகிறது.
உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் கற்பூரவள்ளி வாழைப்பழம் மிகவும் உதவியாக இருக்கிறது.
